On This Day in History May 15, 2019 வரலாற்றில் இன்று பிறந்தவர்கள் மற்றும் மறைந்தவர்கள் இன்றைய நாளின் சிறப்புகள் ஒரே பதிவில் …Important Events Of may-15

On This Day in History May 15, 2019 வரலாற்றில் இன்று பிறந்தவர்கள் மற்றும் மறைந்தவர்கள் இன்றைய நாளின் சிறப்புகள் ஒரே பதிவில் …Important Events Of may-15

 

நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அன்றாட வாழ்வில் பெரும் பயனளிக்கக் கூடியது ‘ஏ.டி.எம்.’ என்றால், அது அணுவளவும் மிகையாகாது.

இந்த ஏ.டி.எம்.மின் பயன்பாடுகள் குறித்து சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. நம்மில் அனைவருக்குமே கண்டிப்பாக தெரிந்திருக்கும்.

ஏ.டி.எம்.மை Any time money என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டாலும், அவசர காலத்தில் நினைத்த மாத்திரத்தில் நம் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக்கொள்வதற்கு வசதியாக, நாம் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே ஏ.டி.எம். மையங்கள் விரவிக் கிடப்பதை அறிவோம்.

இச்சிறப்புமிக்க 🎯ஏ.டி.எம் இயந்திரத்தை கண்டுபிடித்த ஜான் ஷெப்பர் பர்த் டே டுடே

🎯குமுதினி படுகொலை இன்று நினைவேந்தல் நாள்😥

1985ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி குறிகட்டுவான் துறைமுகத்திற்கும் நெடுந்திவிற்க்கும் இடையில் குமுதினிப் படகில் பயணம் செய்த 36 தமிழஎகளை ஸ்ரீலங்கா கடற்படை ஈவிரக்கமின்றி காட்டுமிராண்டித் தனமாக வெட்டிப் படுகொலை செய்த அந்த கொடூரத்தின் அந்த ரணங்கள் தமிழீழக் கடலில் ஆறாத ஈரநினைவு நாள் இன்று.

ஆறா வடுவை ஏற்படுத்திய கண்ணீர் நாளின்று

🎯ஹைடெக் என்ற பெயரில் போனிலுள்ள வாட்ஸ் குரூப்-பில் முழிக்க ஆரம்பித்து அதிலேயே உறங்கும் போக்குக் கொண்ட தற்போதைய நவீன உலகில் வாழ்வாதாரத்திற்காக சொந்த இடங்களை விட்டு வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.இதையொட்டி குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பது அரிதாக உள்ளது. அதனால் குடும்ப கட்டமைப்பிலும் “விரிசல்’ உருவாகிறது. இதையொட்டி ஒவ்வொருவரும் குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர வலியுறுத்தி இதே மே 15 ம் தேதி சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது. ”

💥பி.கு: வாட்ஸ் அப் குரூப்-பில் ஃபேமிலியை ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டு வாழ்த்து அல்லது சேதியை பரிமறுவதை இன்னிக்கு அவய்ட் பண்ணிட்டு நேரில் சந்திக்க முயலுங்களேன்

 

இன்று சுதந்திர இந்தியாவின் முதலாம் இராணுவ தளபதியாய் பதவி வகித்த கே.எம்.கரியப்பா நினைவு நாள் மே 15, 1993.
கரியப்பா. மூன்று தசாப்தங்களாக பரவியிருந்த அவரது இராணுவ வாழ்க்கையில், தனது இறுதி மூச்சு வரை நாட்டிற்காக தன்னலமற்ற சேவை புரிந்தார்.. ஆழ்ந்த மதி நுட்பமும் உறுதியான முடிவகளெடுக்கும் மன ஆற்றலும் நிர்வாக மேலாண்மையும் ஒருங்கே அமையப் பெற்றவர். அவரது உறுதிகுலையாத அணுகுமுறை, 1965 & 1971 போர்களில் இந்திய வெற்றிவாகை சூட உதவியது. தனது இறுதி மூச்சு உள்ளவரை அவரது கொள்கைகளான மதச்சார்பின்மை மற்றும் தேசப்பற்றில் மிகவும் உறுதியாக இருந்தார்.