On This Day in History June 12, 2019 வரலாற்றில் இன்று பிறந்தவர்கள் மற்றும் மறைந்தவர்கள் இன்றைய நாளின் சிறப்புகள் ஒரே பதிவில் …Important Events Of June-12

On This Day in History June 12, 2019 வரலாற்றில் இன்று பிறந்தவர்கள் மற்றும் மறைந்தவர்கள் இன்றைய நாளின் சிறப்புகள் ஒரே பதிவில் …Important Events Of June-12

 

உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்

👥 ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் 2002ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது.

👥 உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர்கள் இருந்துகொண்டு தான் இருக்கின்றனர். சட்டங்கள் இருந்தாலும் இதனை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. எனவே குழந்தை தொழிலாளர்களின் எதிர்கால நலன் கருதி விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஆன் ஃபிராங்க்

📝 உலகப் புகழ்பெற்ற நாட்குறிப்பு நு}லை எழுதிய ஆன் ஃபிராங்க் 1929ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி ஜெர்மனியின் ஃபிராங்பர்ட் நகரில் பிறந்தார்.

📝 ஹிட்லர் ஆட்சியின் போது பல கொடுமைகள் நடந்ததால் தந்தையின் அலுவலகத்தில் உள்ள ரகசிய அறையில் வசித்தனர். இவரது 13-வது பிறந்தநாளுக்கு தந்தை ஒரு டைரி பரிசளித்தார். அதற்கு நாவலில் வரும் ‘கிட்டி” என்ற கதாபாத்திரத்தின் பெயரையே சு+ட்டி, அதில் நாட்குறிப்புகளை எழுதி வந்தார்.

📝 தன்னை சுற்றி நடக்கும் சம்பவங்கள் குறித்தும், ரேடியோ கேட்டும் உலக நடப்பு, இந்திய சுதந்திரப் போராட்டம், காந்திஜியின் உண்ணாவிரதப் போராட்டங்கள் குறித்து அதில் எழுதினார்.

📝 1945-ல் குடும்பத்தினர் அனைவரும் சித்ரவதை முகாம்களில் அடைக்கப்பட்டனர். அங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 15-வது வயதில் ஆன் ஃபிராங்க் மறைந்தார்.

📝 அந்த டைரியை ஒரு பெண் அவளுடைய தந்தையிடம் ஒப்படைத்தார். அதில் 1942 முதல் 1944 வரையிலான நாட்குறிப்பு பதிவுகள் இருந்தன.

📝 இதன் பதிப்பு தமிழ் உட்பட ஏறக்குறைய 70 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இவர் தன் டைரி மூலம் இன்றும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.

முக்கிய நிகழ்வுகள்

★ 1964ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி தென்னாப்பிரிக்க நீதிமன்றம் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்தது.

✍ தமிழ் சிறுவர் இலக்கிய எழுத்தாளரான வி.கிருஷ்ணமூர்த்தி 2014ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி மறைந்தார்.

👉 அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ.புஷ் 1924ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி பிறந்தார்.

★ இந்திய நடிகை மற்றும் பரத நாட்டிய நடன கலைஞரான பத்மினி 1932ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி பிறந்தார்.

🌍 2006ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி கூகுள் எர்த், லினக்ஸ் பதிப்பு வெளியிடப்பட்டது.