On This Day in History June 04 , 2019 வரலாற்றில் இன்று பிறந்தவர்கள் மற்றும் மறைந்தவர்கள் இன்றைய நாளின் சிறப்புகள் ஒரே பதிவில்

On This Day in History June 04 , 2019 வரலாற்றில் இன்று பிறந்தவர்கள் மற்றும் மறைந்தவர்கள் இன்றைய நாளின் சிறப்புகள் ஒரே பதிவில் …Important Events Of June -04

 

 

ஜூன் – 4ஆக்கிரமிப்பால் பலியான ஒன்றுமறியாத குழந்தைகள் தினம்

(International Day of Innocent Children Victims of Aggression)

⚡✍�👉இனக்கலவரம், மதக்கலவரம், போர், வன்முறை போன்ற செயல்களால் அதிகம் பாதிக்கப்படுவது ஒன்றுமறியாத அப்பாவி குழந்தைகளும், பெண்களும் தான். போரின்போது பள்ளிக் கட்டிடங்களே குறிவைத்து தாக்கப்படுகின்றன. இதனால் குழந்தைகள் பாதிக்கின்றனர். ஐ.நா.வின் முடிவுப்படி 1984-ஆம் ஆண்டிலிருந்து ஆக்கிரப்பால் பலியான ஒன்றுமறியாத குழந்தைகள் தினம் ஜூன் 4ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது🙏�⚡✍

❤வ. வே. சு. ஐயர் நினைவு நாள்🐾 – ஜூன் 4👀

♻இவர தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம்,பிரெஞ்ச், லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற தமிழர்!

இவர் பெருமை பற்றி சில் வரிகள்:

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெய்ர்தார்.

தமிழில் முதல் சிறுகதை எழுதியவர்,

ஆயுத பயிற்சி பெற்ற போராளி

தம் குருகுல மாணவர்களுடன் 3.6.1925 அன்று அம்பாசமுத்திரம் அருவி காணத் தம் மகள் சுபத்திராவுடன், மகன் கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றார்.

சுற்றுலாவைக்கூட மாணவர்களை வீரர்களாக உருவாக்கும் ஒரு வாய்ப்பாகக் கருதிய வவேசு அந்த அகண்ட அருவியை பயமின்றி தாண்ட வைத்து மாணவ்ர்களுக்கு பிராக்டிஸ் கொடுத்தார்.

அப்போது . சிறுபெண்ணான சுபத்திரை தானும் அவ்வருவியை எந்த உதவியும் இன்றி தாண்ட விரும்பினார். அதற்கு வ வே சு ஆரம்பத்தில் அனுமதிக்க மறுத்து விட்டார்

உட்னே அப்பா வவேசுவிடம்”ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்று முழக்கமிடும் நீங்கள் பெண் என்பதால் என்னை தாண்ட அனுமதிக்காமலிருக்கிறீர்களா?” என்று கோபமாக கேட்டதும் சுபத்ரையை உச்சி முகர்ந்து அந்த பெண் குழந்தையையும் அருவி தாண்ட அனுமதி தந்தார்.

ஆனால் துர்ரதிர்ஷடவசமாக சிறு பெண்ணான சுபத்திரை அம்முயற்சியில் தவறி அருவியில் விழுந்து விட்டாள்
இதை எதிர்பார்க்காத வ வே சுவும் அவரைக் காப்பாற்ற குதித்து….அவரும் காலமாகி விட்டார்😪

அனில் அம்பானி பிறந்ததினம் இன்று📝🙏

👉🐶👓அனில் அம்பானி (பிறப்பு: ஜூன் 4, 1959)
இந்தியாவைச் சேர்ந்த ஓரு தொழில்
அதிபர் ஆவார். இவர் ரிலையன்ஸ்
நிறுவனத்தின் நிறுவனரான திருபாய்
அம்பானியின் இரண்டாவது மகன்.
அனில் திருபாய் அம்பானி குழுமத்தை
இவர் நடத்தி வருகிறார். முகேஷ் அம்பானி
இவருடைய மூத்த சகோதரர் ஆவார்.🙏�💯

எஸ். பி.
பாலசுப்பிரமணியம் பிறந்ததினம் இன்று 🙏�⚡📡

👉🚶�✍�ஸ்ரீபதி பண்டிதாரத்யுல
பாலசுப்ரமணியம் (பிறப்பு ஜூன் 4, 1946 ,
நெல்லூர் மாவட்டம், மெட்ராஸ்
மாகாணம் தற்போது ஆந்திரப் பிரதேசம் )
புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசைப்
பாடகர் ஆவார். எஸ். பி. பி (S.P.B)
என்ற முன்னெழுத்துகளால்
பரவலாக அறியப்படுகிறார். 1966இல்
ஒரு தெலுங்குத் திரைப்படத்தில்
பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத்
தொடங்கினார். 1966 முதல்
பல்லாயிரக்கணக்கான பாடல்களைப்
பாடியுள்ளார். உலக அளவில் அதிக
எண்ணிக்கையிலான பாடல்களைப்
பாடியதற்காக கின்னஸ் உலக
சாதனைகள் புத்தகத்தில் இடம்
பிடித்துள்ளார். திரைப்பட பாடகர்
மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை
அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர்,
திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல்
தருபவர் எனப் பன்முக அடையாளம்
கொண்டவர். இந்திய அரசு
இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ
விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன்
விருதும் வழங்கியது.

⚡👓📝தொடக்கம்
1960களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசை
உலகில் அறிமுகமான எஸ். பி.
பாலசுப்பிரமணியம் ஐம்பது
ஆண்டுகளாகத் தொடர்ந்து
முன்னணிப் பாடகராக உள்ளார் . இவர் தமிழில் முதலில் பாடியது சாந்தி
நிலையம் படத்தில் வரும் இயற்கையெனும்
இளையகன்னி என்ற பாடலாகும்.
ஆனால் அது வெளிவரும் முன்பே
எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண்
திரைப்படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா
வெளிவந்தது.

👉🙏�📡சாதனைகள்
நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்
பிடித்திருக்கிறார் . ஆறு முறை சிறந்த
பின்னணிப் பாடகருக்கான தேசிய
விருதினைப் பெற்றிருக்கிறார். எஸ். பி. பி.
முறையாக கர்நாடக இசையைப் பயின்றது
இல்லை என்றாலும் சங்கராபரணம்
என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த
பாடலுக்காக தேசிய விருது
பெற்றார். இதுவரை தேசிய விருதினை
நான்கு மொழிகளுக்குப்
பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப்
பாடகர் இவர் ஒருவரே. பிலிம்பேர் விருதினை
ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு)
மூன்று முறையும் பெற்றுள்ளார். மேலும்
இவர் தமிழக மற்றும் கர்நாடக
அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர
அரசின் நந்தி விருதினை 25 முறையும்
பெற்றார். இவர் 1981 ஆம் ஆண்டு
தமிழக அரசின் கலைமாமணி விருது
பெற்றிருக்கிறார். எஸ் பி பி எந்த
பாடகரும் செய்யாத சாதனைகளை
இந்திய திரையிசையில் செய்திருக்கிறார்.
இவர் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி
கர்நாடகா , பெங்களூரில் உள்ள
பதிவரங்கில் காலை 9 மணியில் இருந்து
இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21
பாடல்களை கன்னட மொழி
இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக
பாடி சாதனை செய்துள்ளார். மேலும்
தமிழ் மொழியில் 19
பாடல்களையும் (ஒரேநாளில்), இந்தி
மொழியில் 16 பாடல்களையும்
(6மணி நேரத்தில்) பாடி சாதனை
செய்திருக்கிறார்.
இவைகளெல்லாம் இவருடைய
குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.