8 வழிச் சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தம்

சென்னை – சேலம் இடையேயான எட்டு வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் 2 வார காலத்திற்கு நிறுத்தி வைக்கப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. திட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக மத்திய அரசு பரிசீலித்து வருவதால் இது போன்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

திட்டத்தை மேற்கொள்வது தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படாத நிலையில் , மரங்களை மத்திய அரசு சார்பில் வெட்டவில்லை என்றும் தனிநபர்கள் அரசின் பெயரை பயன்படுத்தி இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் , மரங்களை வெட்டிய புகாரில் சில நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

முன்னதாக எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு தடை கோரியும் , நிலம் கையகப்படுத்த தடை கோரியும் விவசாயிகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு இன்று நீதிபதி சிவஞானம் அமர்வில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மரம் வெட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு வரும் 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது