73 அடி துணியில் 73 தேசத் தலைவர் படங்கள்… அசத்திய மாணவர்கள்!

73வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவர்களின் படங்களை 73 அடி நீள கதர் துணியில் நெல்லை மாணவர்கள் வரைந்தனர்.

இந்திய நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவர்கள், அவர்களின் தியாகங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாவட்ட அருங்காட்சியத்தில் 73 அடி நீள கதர் துணியில் 73 தேசத் தலைவர்களின் உருவப் படங்கள் வரைதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மகாத்மாகாந்தி, பாரதியார், பகத்சிங், பாலகங்காதர திலகர், முத்துராமலிங்கத் தேவர், அம்பேத்கர், சுப்பிரமணிய சிவா, திருப்பூர் குமரன், சர்தார் வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத், அபுல்கலாம் ஆசாத், வ.உ.சிதம்பரனார் மற்றும் நூலகதந்தை எஸ்.ஆர். ரெங்கநாதன் போன்றோரது உருவப் படங்களை ஆகிரியர்களின் வழிகாட்டுதலில் நெல்லை பள்ளி மாணவர், மாணவிகள் தத்ரூபமாக வரைந்து அதன் பின்புறத்தில் தேசிய கொடியின் வண்ணத்தை தீட்டி அதனை கையில் பிடித்தவாறு மாவட்ட அருங்காட்சியம் முன்பாக அணிவகுத்து நின்றனர்