72,000 மெட்ரிக் டன் நிலக்கரி தேவை … பிரதமருக்கு முதல்வர் கடிதம்

பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.  அந்த கடிதத்தில், தமிழ்நாட்டில் நிலக்கரி தொழிற்சாலைகளில் பெறப்படும் நிலக்கரியின் அளவு மிகக் குறைந்த அளவிற்கு சென்றுள்ளது.  தமிழக அனல் மின் நிலையங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளது.

தமிழகத்திற்கு தேவைப்படும் தினசரி மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய சராசரியாக 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. 20 அடுக்கு நிலக்கரி தேவைப்படும் நிலையில், 7 அல்லது 8 அடுக்கு நிலக்கரி மட்டுமே இருப்பில் உள்ளது. காற்றாலை மின்சாரமும் செப்டம்பர் மத்தியில் நிறைவு பெற்று விடும்.
எனவே நிலக்கரி உரிய அளவில் கிடைக்காவிடில், தமிழக அனல்மின் நிலையங்களை மூட வேண்டிய சூழல் ஏற்படும்.

ஆகையால் மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம், ரயில்வேத் துறை அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டு, தமிழகத்திற்கு தேவையான 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி தேவையை பூர்த்தி செய்ய உடனடியாக உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.