7வது ஊதியக் குழு-காலம் தாழ்த்தி ரூ.26,000 கோடி லாபம் பார்த்த அரசு!

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழுவின் சம்பள உயர்வில் காலம் தாழ்த்தியதால், பல ஆயிரம் கோடிகளை லாபமாக ஈட்டியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து ஆய்வு செய்து, அறிக்கை சமர்பிக்க தனியாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்.

இந்நிலையில் 7வது ஊதியக் குழு, தனது அறிக்கையை மத்திய அரசிடம் வழங்கி பல மாதங்கள் ஆகியுள்ளன. இதனைத் தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் முதல் ஊதியத்தில் ஏற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஊதிய உயர்வு வரும் ஏப்ரல் மாதம் முதல் மட்டுமே வழங்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. இவ்வாறு மத்திய அரசு காலம் கடத்துவதால், சுமார் ரூ.26,000 கோடி மிச்சப்படுத்துகிறது.