46வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமனம்

உச்ச நீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வரும் 3ம் தேதி பதவியேற்க உள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக் காலம், வரும் 2ம் தேதியுடன் முடிவடைகிறது.  இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக  ரஞ்சன் கோகாயை மத்திய அரசின் பரிந்துரைப்படி,  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று நியமித்துள்ளார்.

இதன்படி நாட்டின் 46வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் வரும் 3ம் தேதி பதவி ஏற்கிறார். இவர் 2019 நவம்பர் வரை பதவியில் இருப்பார்