4 மணியும்… நாலு திசையும் ….. ஒரு வரி செய்திகள்

ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் சீர்திருத்தம் செய்யக் கோரிய காங்கிரசின் மனு தள்ளுபடி. போலி வாக்களர்களை நீக்க புதிய வழிமுறையை கண்டறிய வேண்டும் என மனுவில் கோரிக்கை.
தேர்தல் ஆணையம் கடைபிடித்து வரும் விதிமுறைகளில் எந்த குளறுபடிகளும் இல்லை. – உச்சநீதிமன்றம்.

 

ஸ்டேட் பாங்க் ஆப் மொரிஷியஸ் மும்பை கிளையில் ரூ.143 கோடி சுருட்டல். வங்கியில் ரகசிய வலைத்தளத்தில் ஊடுருவி மர்மநபர்கள் ரூ.143 கோடியை எடுத்துவிட்டனர்.

 

இணையதள சர்வர்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அடுத்த 48 மணி நேரத்துக்கு உலகம் முழுவதும் இணையதள சேவை பாதிக்கப்பட உள்ளதாக தகவல்.

 

நாடாளுமன்ற தேர்தலும், தமிழக சட்டமன்றத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடக்க வாய்ப்பு இல்லை- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத். தமிழக அரசின் பதவிகாலம் 2021 வரை உள்ளது. தமிழகத்தில் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு யாருடைய நிர்பந்தமும் காரணமில்லை. திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான வழக்கு முடிந்தால்தான் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்க முடியும். வழக்கு 23-ம் தேதி நிறைவடைந்தால் ஜனவரி மாதத்திற்குள் இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்படும். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த மனு நிலுவையில் உள்ளதால் அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது – இந்திய தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்.

புதிய தலைமைச் செயலக கட்டட விவகாரத்தில் குற்றவியல் விசாரணைக்கு பரிந்துரைத்த தனி நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவுக்கு உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தடை

பாடகி சின்மயி அம்மா பத்மாசினி, 2014-ம் ஆண்டு கவிஞர் வைரமுத்து பிறந்தநாளுக்கு டுவிட்டரில் பதிவிட்ட வாழ்த்து. வைரமுத்துவாலும் ஏ.ஆர்.ரகுமானாலும் நீர் வார்த்து வளர்க்கப்படும் செடி சின்மயி என்று பத்மாசினி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இனி நீதிபதிகளுக்கு வார விடுமுறை கிடையாது: முதல் அறிவிப்பிலேயே கலக்கத்தை ஏற்படுத்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கோகாய்

அக்.28,29ம் தேதி 2 நாள் அரசு முறைப் பயணமாக ஜப்பான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி * 13வது இந்தியா-ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி

லஞ்சம்- கைது… விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் விவசாயியிடம் ரூபாய் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி ஒன்றிய ஊழியர் கைது. திருநாவலூர் விவசாயி குமார் என்பவரிடம் இருந்து பண்ணை குட்டை அமைத்தல் வரப்பு சீர்செய்தல் பணிக்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது இந்தத் தொகையை வழங்குவதற்காக 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்ட ஊராட்சி ஒன்றிய ஊழியர் வேலுவை விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று கைது செய்தனர்.

 

பூக்கடைகளை அகற்றியது போல் பர்மா பஜாரில் திருட்டு விசிடி கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? – சிஎம்டிஏ-வுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் உயர்ந்து வரும் நிலையில், ஆயில் நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

 

இஸ்ரோ 2022 க்குள் இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்ப இலக்கு நிர்ணையிக்கப்படு பணிகள் நடைபெற்று வருகிறது மனிதர்களை கொண்டு செல்ல விண்கலம் வடிவமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சந்திராயன் 2 செயற்கைக்கோள்  ஜனவரி மாதம் 2019 க்குள் விண்ணில் ஏவப்படும் இது நிலவில் தரையிரங்கி அங்கு ஆய்வு செய்து தகவல்களை இஸ்ரோவிற்கு அனுப்பும்.இதற்கான இறுதி கட்ட பணிகள்.தற்போது நடைபெற்று வருகிறது. பேரிடர் காலங்களில் இயற்கை பேரிடர்களை கணித்து மக்களை விழிப்புணர்வு அடைய செய்வதும் புயல் காலங்களில் புயலை முன்கூட்டியே அறிவிப்பது உயிர் பலி ஏற்படுவதை குறைந்துள்ளது என விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனர் – சோம்நாத் கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி

 

அமமுக ஐடி விங் மாநில மகளிர் பிரிவு செயலாளராக டிடிவியின் உதவியாளர் ஜனார்த்தன் மனைவி இஷிகா நியமனம் 👇🏼

 

நடப்பு கணக்கு பற்றாக்குறை, ரூபாய் மதிப்பு சரிவை தடுக்கும் நோக்கில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் ஸ்மார்ட் வாட்ச் உள்பட 17 பொருட்கள் மீதான வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

சென்னையில் வெயில் கொளுத்தும்….
ஆந்திரா, ஒடிசாவை புரட்டி போட்ட டிட்லி புயலின் தாக்கம் காரணமாக சென்னையில் இன்னும் சில தினங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதேசமயம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று சென்னை வானிலை மையம் தொிவிச்சிருக்குது