200 ரூபாய் கடன் வாங்கியவருக்கு கடவுள் கொடுத்த பரிசு 1.5 கோடி

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மனோஜ்குமார். அவரது மனைவி ராஜ் கவுர். இருவரும் செங்கல்சூளையில் வேலைக்கு சென்று வந்தனர். இத்தம்பதிக்கு 3 மகள்கள். ஒரு மகன்.

மனோஜ் குமார் நண்பரிடம் இருந்து 200 கடன் வாங்கி ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார். அவர் வாங்கி லாட்டரிக்கு 1.5 கோடி பரிசு கிடைத்தது இப்போது வங்கி அதிகாரிகள் மற்றும் நில புரோக்கர்கள் அவர்கள் வீட்டை தட்டிய படி உள்ளனர்.

இது குறித்து மனோஜ்குமார் கூறியதாவது: தினசரி கடினமாக உழைத்தாலும் என்னால் 250-க்கு மேல் வாங்க முடியாது. ஒரே நாளில் 1.5 கோடி என்பது இன்ப அதிர்ச்சியாக உள்ளது. என் தந்தை உயிரோடு இருக்கும் போது நான் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

இப்போது லாட்டரி பணம் மூலம் அவரது கனவு நிறைவேறி இருக்கிறது. நான் முதன் முதலில் வாங்கி சீட்டுக்கு 1.5 கோடி பரிசு கிடைத்து இருக்கிறது. இவ்வாறு கூறினார்.