14 மணி நேரத்தில் நம்பி நாராயணனான நம்ம ஆளு…

அலைப்பையுதே படத்தில் மூலம் அறிமுகமான நடிகர் மாதவன் இறுதிச்சுற்று படத்தில் தனது தோற்றத்தை மாற்றி வித்தியாசமான பாத்திரத்தில் நடித்தார்.

அடுத்து இஸ்ரோ விஞ்ஞானி பற்றிய ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் என்ற படத்தில் நடிக்கிறார். இதற்காக நம்பி நாராயணன் போலவே தனது தோற்றத்தை மாற்ற தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஒரு வீடியோ இணைப்பில், நம்பி நாராயணன் போன்ற தோற்றத்தைப் பெறுவதற்காக 2 நாட்கள் ஒரே நாற்காலியில் 14 மணி நேரம் அமர்ந்திருந்தேன் என்று கூறியுள்ளார்.

தலைமுடி, தாடி என ஆகியவை நம்பி நாராயணன் போலவே மாறிய அவர் தொப்பையையும் வளர்த்திருக்கிறார். அதிசயமாக அடுத்த 12 நாட்களில் எந்த டயட் முறையையும் பின் பற்றாமல் பழைய தோற்றத்துக்கு மாறியுள்ளார். “நம்புங்கள். உங்களால் முடியும்” என்றும் தனது பதிவில் மாதவன் குறிப்பிட்டுள்ளார்.