14ம் தேதி தி.மு.க செயற்குழு கூட்டம் ; அன்பழகனை சந்தித்த ஸ்டாலின்

அண்ணா அறிவாலயத்தில் வரும் 14ம் தேதி தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அன்பழகன் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பின் நடைபெறவுள்ள முதல் செயற்குழு கூட்டத்தில் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்துவது முக்கிய அம்சம் என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக தி.மு.க பொதுச் செயலாளர் பேராசியர் அன்பழகனை மு.க ஸ்டாலின் சந்தித்துள்ளார். தி.மு.க பொது குழு, மாநில சுயாட்சி மாநாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஸ்டாலினுடன் தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன், ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் உடன் சென்றிருந்தனர்