10% இடஒதுக்கீடு : அனைத்து கட்சி கூட்டத்தில் அவரவர் விருப்பம்

பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு தொடர்பாக சென்னையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 21 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்தக்கூட்டத்தில்  திமுக தலைவர் மு க ஸ்டாலின்,  திக கட்சியின் கீ.வீரமணி, பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்  கமலஹாசன், பாலகிருஷ்ணா, முத்தரசன் போன்றோர் பங்கேற்றுள்ளனர்.

துணை முதல்வர் பேசும்போது தமிழக அரசு தொடர்ந்து 69 % இட ஒதுக்கீட்டை வழங்கி வருகிறது. ஆனால் இந்த 10 % இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசு விண்ணப்பித்தால் கூடுதலாக 1000 பேர் மருத்துவர் இடங்கள் படிக்க முடியும்   என்று தெரிவித்தார். இதுபற்றி தங்களது கருத்துக்களை அரசியல் தலைவர்கள் கூறிவருகிறார்கள்.

தி.மு.க:  திமுக சார்பாகத் தனது  கருத்தை கூறிய மு.க. ஸ்டாலின் காமராஜ,ர் அண்ணா கருணாநிதி, ஜெயலலிதா என யாருமே இட ஒதுக்கீட்டில் சமரசம் செய்ததில்லை, பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறினார்.

நாம் தமிழர் கட்சி: பொளுதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு தேவை இல்லாதது. அவர்களது பெயரே முன்னேறிய வகுப்பினர். பின் எதற்கு அவர்களுக்கு இட ஒதுக்கீடு? என்று கூறி இந்த மசோதாவுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம்: பொருளாதாரத்தில் நளிவுற்றோருக்கு  10% இட ஒதுக்கீடு என்பது  சமூக நீதிக்கு எதிரானது என்று மக்கள் மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸ்: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது, ‘’69% இடஒதுக்கீட்டுக்கு பிரச்னை ஏற்படாத வகையில் 10% இடஒதுக்கீடு வழங்கும்பட்சத்தில் காங்கிரஸ் இதனை ஆதரிக்கிறது என்று தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட்:   ’69% இடஒதுக்கீட்டுக்கு பிரச்னை ஏற்படாத வகையில் 10% இடஒதுக்கீடு வழங்கும்பட்சத்தில் செயல்படுத்தலாம் என்று காங்கிரஸ் கூறியதையே மார்க்சிஸ்ட் கட்சியும் தெரிவித்தது.

பா.ஜ.க: பா.ஜ.க சார்பாகப் பேசிய தமிழிசை, இந்த இட ஒதுக்கீடு உயர் சாதியினருகானது என்று நினைக்க வேண்டாம். இது சமூக நீதிக்கு எதிரானது என்று கூறுவது தவறு என்று தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 21 கட்சிகளில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு விஷயத்தில் 16 கட்சிகள் எதிர்ப்பும். 5 கட்சிகள் ஆதரவும் தெரிவித்துள்ளன. திமுக, மதிமுக, மநீம, நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் உள்பட மொத்தம் 16 கட்சிகள் 10% இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்தன. அதே போல் அதிமுக, பாஜக, காங்கிரஸ், புதிய தமிழகம் உள்பட 6 கட்சிகள் 10% இட ஒதுக்கீட்டை ஆதரித்தன.

10 % இட ஒதுக்கீடு குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இடையே வாக்குவாதம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது