🦉 டா வின்சி பர்த் டே டுடே💐

 

🎭 உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தை வரைந்த லியானார்டோ டா வின்சி 1452ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி இத்தாலியின் ஃபிளாரன்ஸ் நகரில் பிறந்தார்.

🎭 இவர் வேதிப் புகைஇ கவச வாகனங்கள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களை வடிவமைத்து உருவாக்கினார். பல இயந்திரங்களையும் வடிவமைத்துள்ளார்.

🎭 உலகப் புகழ்பெற்ற தனது “தி லாஸ்ட் சப்பர்” ஓவியத்தை 1495-ல் வரையத் தொடங்கிஇ 1498-ல் நிறைவு செய்தார். 1503-ல் புகழ்பெற்ற மோனலிசா வண்ண ஓவியத்தைத் தீட்டத் தொடங்கி மூன்றாண்டுகளில் அதை நிறைவு செய்தார்.

🎭 இவர் மேலும் நீர்க் கடிகாரம் ஒன்றையும் உருவாக்கியுள்ளார். விமானம்இ நீர்மூழ்கிக் கப்பல் தொடங்கி கருவில் குழந்தை எப்படி இருக்கும் என்பதுவரை இவரது கற்பனைகள் விரிந்திருந்தது.

🎭 உலகம் போற்றும் உயர்ந்த கலைஞரும்இ பன்முகத் திறன் வாய்ந்த மேதையுமான லியானார்டோ டா வின்சி 67-வது வயதில் (1519) மறைந்தார்.