🚩🔯ராசிபலன்கள்🔯🚩 🔔7/8/2018🔔

🔯மேஷம் ராசி

குடும்ப உறுப்பினர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ளவும். எடுத்துச்செல்லும் உடைமைகளில் கவனம் தேவை. உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் பிறரின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க நேரிடும். வியாபாரத்தில் கொடுக்கல் – வாங்கலில் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : குடும்ப உறுப்பினர்களிடம் கனிவுடன் பழகவும்.
பரணி : வேலைப்பளு அதிகரிக்கும்.
கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.

🔯ரிஷபம் ராசி

வர்த்தகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். திட்டமிட்ட பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிய இலக்குகளை நோக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். நண்பர்களிடம் தேவையற்ற வாதத்தை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
ரோகிணி : எண்ணங்கள் ஈடேறும்.
மிருகசீரிடம் : வீண் வாதங்களை தவிர்க்கவும்.

🔯மிதுனம் ராசி

மற்றவர்களுக்கு உதவுவீர்கள். பொதுக்கூட்ட பேச்சுகளில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். தொழில் சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். திறமைக்கேற்ற பாராட்டு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிடம் : மற்றவர்களுக்கு உதவுவீர்கள்.
திருவாதிரை : ஆதரவு கிடைக்கும்.
புனர்பூசம் : புகழ் உண்டாகும்.

🔯கடகம் ராசி

வியாபாரம் சம்பந்தமான சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். சாமர்த்தியமான பேச்சுகளால் எண்ணிய வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். திருமணப் பேச்சு வார்த்தைகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

புனர்பூசம் : புதிய நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள்.
பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
ஆயில்யம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

🔯சிம்மம் ராசி

மனைகள் மூலம் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் தடைபட்ட செயல்கள் ஈடேறும். கெளரவ பதவிகளால் மகிழ்ச்சி உண்டாகும். அக்கம், பக்கம் வீட்டார்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பழைய கடன்களை அடைப்பதற்கான எண்ணங்கள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சந்தன மஞ்சள் நிறம்

மகம் : இலாபம் உண்டாகும்.
பூரம் : தடைபட்ட செயல்கள் ஈடேறும்.
உத்திரம் : எண்ணங்கள் மேலோங்கும்.

🔯கன்னி ராசி

உத்தியோகஸ்தரர்களுக்கு உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் முக்கிய ஆவணங்களை கையாளும்போது கவனமாக செயல்படுவது நல்லது. குடும்ப வருமானத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் அதிரடியான முடிவுகளால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

உத்திரம் : சாதகமான நாள்.
அஸ்தம் : கவனம் தேவை.
சித்திரை : அனுகூலமான நாள்.

🔯துலாம் ராசி

தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும். நட்பு வட்டம் விரிவடையும். வீட்டை அழகுப்படுத்துவதற்கான எண்ணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
சுவாதி : ஆதரவு கிடைக்கும்.
விசாகம் : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

🔯விருச்சகம் ராசி

உத்தியோகஸ்தரர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பழைய உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனைவி வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

விசாகம் : அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.
அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
கேட்டை : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

🔯தனுசு ராசி

பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையை அறிந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் சில விரயங்கள் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புனித யாத்திரை சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : பிள்ளைகளின் ஆதரவு கிடைக்கும்.
பூராடம் : விரயங்கள் உண்டாகும்.
உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

🔯மகரம் ராசி

உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் புதிய யுக்திகளால் பழைய சரக்குகளை விற்பனை செய்வீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.
திருவோணம் : கவலைகள் குறையும்.
அவிட்டம் : உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும்.

🔯கும்பம் ராசி

வியாபாரத்தில் நீங்கள் செய்யும் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். எதிர்பார்த்தவைகளில் சில செயல்கள் தடைபட்டாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து போகும். குடும்ப வருமானத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : போட்டிகளை சமாளிப்பீர்கள்.
சதயம் : கருத்து மோதல்கள் வந்து போகும்.
பூரட்டாதி : புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.

🔯மீனம் ராசி

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் ஆதரவான சூழல் அமையும். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : ஆதரவான சூழல் அமையும்.
உத்திரட்டாதி : புதியவர்களின் நட்பு கிடைக்கும்.
ரேவதி : புரிதல் உண்டாகும்.