🎯வால்ட் டிஸ்னி உருவான நாளின்று🏵

🎯வால்ட் டிஸ்னி உருவான நாளின்று🏵
#WaltDisney

🎬திரையில் மட்டுமே காட்ட முடிந்த கற்பனை உலகை நிஜமாக்கி காட்ட விரும்பிய டிஸ்னி, 1955-ம் ஆண்டில் 17 மில்லியன் டாலர் செலவில் மிகப்பிரமாண்டமான டிஸ்னி வேர்ல்ட் (Disneyland Park) என்ற பொழுதுபோக்குப் பூங்காவை அமெரிக்காவின் ஆக்லாந்து நகரில் உருவாக்கினார்.

இந்த பூங்கா நிச்சயம் முதல் ஆண்டிலேயே நொடித்துப்போகும் என்று பலரும் கருதினர். ஆனால் பூங்காவை பார்க்க வந்தவர்களோ மிக்கி மவுஸின் அழகை ரசித்து பூலோக சொர்க்கம் என்று வர்ணித்தனர். முதல் 25 ஆண்டுகளில் பல உலகத்தலைவர்கள் உள்பட 200 மில்லியன் பேர் கண்டு ரசித்து மிக்கி மவுஸ் உடன் செல்பி எடுத்துள்ளனர். 👀

தற்போதும் ஆண்டுக்கு சுமார் 15 மில்லியன் வருகையாளர்களை அது ஈர்க்கிறது. ஒவ்வொரு குழந்தையும் சென்று பார்த்து வர விரும்பும் கனவுலகம் அது.

டிஸ்னி சிறுவனாக இருந்தபோது, பள்ளிக்குப் போகும் வழியில் ஒரு பூங்கா இருந்தது. அதில் கட்டணம் செலுத்தினால்தான் விளையாட முடியும். டிஸ்னி அப்போது ஏழ்மையில் வாடியதால், ஒருமுறைகூட அவரால் அந்த பூங்காவில் விளையாட முடியவில்லை. அந்த ஏக்கம்தான் உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் பூங்காவை உருவாக்கும் எண்ணத்தை அவருக்குள் விதைத்ததாம்