🌞 தின பலன் 🌞 10/10/2018.

மேஷம்: உங்களின் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச் சிற்கு மதிப்பளிப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகு முறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். திறமை
கள் வெளிப்படும் நாள்.

ரிஷபம்: எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிகாரப் பதவியில் இருப் பவர்கள் அறிமுகமாவார்கள். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

மிதுனம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்துயோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுப்படுத்து வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

கடகம்: எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரி களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர் கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வியாபா ரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

சிம்மம்: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தைரியம் கூடும் நாள்.

கன்னி: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப் பங்கள் விலகும். புதியவரின் நட்பால் உற்சாக மடைவீர்கள். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

துலாம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் பல விஷயங் களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். முக்கிய விஷ யங்களை நீங்களே நேரடியாக சென்றுசெய்வது நல்லது. உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்: எடுத்த வேலை களை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளை களால் டென்ஷன் ஏற்படும். உடல் அசதி, சோர்வு வந்து
நீங்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப் பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய் யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

தனுசு: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். சகோதரங்களால் பயனடை வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப் பாட்டிற்குள் வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டு வார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மகரம்: சொன்ன சொல் லைக் காப்பாற்றத் துடிப் புடன் செயல்படுவீர்கள். பிள்ளை களை புதிய பாதையில் வழிநடத்துவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரம் சூடுபிடிக் கும். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.

கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்கு கள் நீங்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோ கத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மனநிறைவு கிட்டும் நாள்.

மீனம்: சந்திராஷ்டமம் தொடங் குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள்
யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ள வில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபா ரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப்பழகுங்கள். உத்யோகத்தில் அதிகாரி களுடன் பனிப்போர் வந்து நீங்கும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்

3 thoughts on “🌞 தின பலன் 🌞 10/10/2018.

  • 11th October 2018 at 1:20 AM
    Permalink

    Like!! I blog frequently and I really thank you for your content. The article has truly peaked my interest.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *