ஸ்வீட் ஷாக் கொடுத்த எச். வசந்தகுமார்

இன்னும் எம்பியாக கூட பதவியேற்கவில்லை.. அதற்குள் ஸ்வீட் ஷாக் கொடுத்த எச். வசந்தகுமார்

 

 

 

வழக்கமாக எல்லோரும் ஓட்டுப் போட காசு தருவார்கள்தான். ஆனால் கன்னியாகுமரி தொகுதி எம்பி எச். வசந்தகுமார் கொஞ்சம் வித்தியாசமானவர். எப்படின்னு பாருங்க!

நாங்குநேரி சட்டசபைத் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர்தான் வசந்தகுமார். லோக்சபா தேர்தல் வந்ததும் எம்எல்ஏ பதவியை விட்டு விட்டு எம்பி பதவிக்கு வந்து விட்டார். பொன் ராதாகிருஷ்ணன் என்ற ஜாம்பவானை ஜஸ்ட் லைக் தட் வீழ்த்தி வெளியேற்றிய பெரும் கோடீஸ்வரர். இப்போது இவர் இன்னொரு அசத்தலான வேலையைச் செய்யவுள்ளார். ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார் வசந்தகுமார். அதாவது தனது மாதச் சம்பளத்தை தொகுதி மக்களுக்காக செலவிடப் போகிறேன். அதுவும் ஏழைகளுக்கும், கல்வி க்காகவும் செலவிடப் போவதாக அவர் கூறியுள்ளார்.
இதுதான் வரவேற்பைப் பெற்றுள்ளது. சம்பளம் வழக்கமாக ஜெயிப்பதற்காகத்தான் பணத்தை இறக்குவார்கள். ஆனால் வசந்தகுமாரோ ஜெயித்த பிறகு பணத்தை இறக்குகிறார். அதுவும் இன்னும் எம்பியா கூட பதவியேற்கவில்லை. அதற்குள் மக்களுக்காக தனது சம்பளத்தையே ஒதுக்கி விட்டார்.

ஜெயலலிதா இப்படித்தான் அதிமுகவில் ஒரு எம்எல்ஏ இருந்தார். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அவர். தனது மாதச் சம்பளத்தை தொகுதி மக்களுக்காக செலவிட்டு வந்தார். ஜெயலலிதாவின் அன்பையும், பாராட்டையும் கூட அவர் பெற்றார். செந்தில் பாலாஜி கூட அப்போது இந்த எம்எல்ஏவைப் பார்த்து மிரண்டு போயிருந்தார். இது கடந்த காலம். 1 லட்சம் ரூபாய் ஆனால் எச். வசந்தகுமார் தனது மாதச் சம்பளம் ரூ. 1 லட்சத்தை மக்களுக்காக ஒதுக்கியிருப்பது பாராட்டுக்குரியது. இப்போது எம்பிக்களுக்கு மாதச் சம்பளம் ரூ. 1 லட்சம் வழங்கப்படுகிறது.
இதுபோக தொகுதிப் படி 45,000, நாடாளுமன்ற அலுவலக படி ரூ. 45,000, நாடாளுமன்ற கூட்டத் தொடர் படி தினசரி ரூ. 2000 என பெரும் பண மழை பொழியும். பாராட்டுக்கள் இந்த படிகளையும் சேர்த்து மக்களுக்காக செலவிடப் போகிறாரா அல்லது சம்பளம் மட்டும்தானா என்பது தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் நிச்சயம் வசந்தகுமாரின் செயல்பாடும் அறிவிப்பும் பாராட்டுக்குரியது. நல்லது நடந்தால் சரி.