ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் கருடசேவை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர விழாவில் 5-ம் நாள் நிகழ்வான கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆண்டாள் அவதரித்த நட்சத்திரமான ஆடிப்பூரம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் 5-ம் நாளில் சீனிவாச பெருமாள், திருவேங்கமுடையான், சுந்தரராஜ பெருமாள் உள்ளிட்ட 5 பெருமாள் கருட வாகனத்திலும், ஆண்டாள், ரெங்கமன்னார் அன்ன வாகனத்திலும் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

ஆடிப்பூரம் அன்று நடைபெறும் தேர் திருவிழாவும், 5-ம் நாள் நடைபெறும் கருட சேவையும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர்.