ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் -அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான தமிழரசன் மற்றும் காளியப்பன் ஆகியோரது குடும்பத்தினருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அரசு அறிவித்த ரூ.20 லட்சம் நிதியை இன்று வழங்கினார்.  காயமடைந்து  சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார். பின் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:- தூத்துக்குடிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்து சென்ற பிறகு, இங்குள்ள நிலவரம் குறித்து எடுத்துக் கூறிய பிறகே ஸ்டெர்லைட் ஆலையை மூட முதல்-அமைச்சர் உத்தரவிட்டார் ஸ்டெர்லைட் ஆலை ஒரு போதும் திறக்கப்படாது. நிரந்தரமாக மூடப்படும்.

மோதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும். மேலும் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து வாலிபர் பிரின்ஸ்டன் கால் இழந்தது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என்றார்