ஸ்டெர்லைட்டை ஒரு போதும் இயங்க விட மாட்டோம் … ஜான் பாண்டியன் 

தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன்  இன்று காலை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் எஸ்.பி.சக்தி கணேசனை சந்தித்து  தனது ஈரோடு மாவட்ட சுற்றுப்பயணத்தில் சிறப்பாக போலீஸ் பாதுகாப்பு கொடுத்தமைக்கு நன்றி தெரிவித்தார்.

பின் செய்தியாளர்களிடம் அவர் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வரும் 15-ந்தேதி தஞ்சையில் மாநில மாநாடு நடக்கிறது. இதற்காக தை ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு வருகிறேன்.  பசுமை வழிசாலை திட்டத்தை மக்கள் எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் அரசு அமைத்து தீர்வோம் என போராடி வருகிறது.இந்த விவகாரத்தில் அரசு வெள்ளை அறிக்கை (உண்மை நிலை)யை வெளியிட வேண்டும்.

காவிரி பிரச்சினையில் கர்நாடகம் உச்ச நீதிமன்றத்தை மதிக்காமல் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. இந்த வி‌ஷயத்தில் உச்சநீதி மன்றம் இனியும் தாமதிக்க கூடாது.

தமிழக முதல்வரை சந்தித்து அதை ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினேன். இப்போது மீண்டும் ஆலையை இயக்க நிர்வாகம் முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது. மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் ஒரு போதும் இயங்க விட மாட்டோம்.

இவ்வாறு ஜான் பாண்டியன் கூறினார்