வைச்சாம் பாரு பேனரை… சிரிப்பதா…? அழுவதா…?

இரு திராவிட கட்சிகளுமே அளவுக்கு அதிகமாக பேனர்கள், சுவர் விளம்பரங்கள் செய்து மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வருவதை உணர்ந்து கொண்ட திமுக தலைமை சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், அதிமுகவோடு போட்டி போட்டு கட்-அவுட்டுகளை வைக்க வேண்டாம், இது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்று அறிவித்துள்ளது.

ஆனால், அந்த ஊடக செய்திகளை கண்டு கொள்ளாத அதிமுகவினரோ, தொடர்ந்து கட்-அவுட் கலாச்சாரத்தை தூக்கி பிடித்து வருகிறார்கள். பொதுமக்கள் இதைப் பார்த்து என்ன தான் வேதனை வெளிப்படுத்தினாலும், தலைமையை குளிர்வித்து வேண்டியதை பெற வேண்டும் என்ற எண்ணத்தில், ர.ரக்கள் சென்னையில் நீக்கமற கட்-அவுட்டுகளை அமைத்து கடுப்பேற்றி வருகிறார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால்,முதலமைச்சரின் முழு பெயர் கூட தெரியாமல் பேர் வைக்கும் ர.ரக்களை பார்த்து சிரிப்பதா? அழுவதா? என்றே தெரியவில்லை