வெடிகுண்டு தாக்குதல் வழக்கு : 19 பேருக்கு தூக்கு… 19 பேருக்கு ஆயுள்

வங்கதேசத்தின் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி கடந்த 2004-ம் ஆண்டு டாக்காவில் ஒரு பேரணியை  நடத்தியது.  அப்போது பிரதமராக கலீத ஜியா இருந்தார்.

இந்த பேரணியில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.  அதில் ஷேக் ஹசீனா பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.  இந்த தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 500 பேர் காயம் அடைந்தனர்.

இது தொடர்பான வழக்கு வங்கதேசத் தலைநகர் தாக்கா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் கலீத ஜியாவின் மகன் தாரிக் உட்பட 19 பேருக்கு ஆயுள் தண்டனையும், 19 பேருக்கு மரண தண்டனையும்  வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது