வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளில் இதற்கே முதலிடம்

வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளில், உலகளவில் பூனைகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன… சமூக வலை தளங்களிலும், பூனைகளே
முதலிடத்தைப் பிடித்துள்ளன. உலகளவில் அதிகமாக வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளில் பூனையும் ஒன்று. பூனைக்கு அழகே, அதனுடைய கண்களும் மீசையும் தான்.உலகம் முழுவதும் 40 வகையான பூனை இனங்கள் உள்ளன. அதில், 50 கோடிக்கும் அதிகமான பூனைகள், வீடுகளில் வளர்க்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.பூனை மிகவும் சுத்தமான உயிரினம். மீன் குழம்பை விட அதிகளவில் விரும்பி சாப்பிடக் கூடியது கருவாட்டுக் குழம்பு தான். இவை, சுமார் 20 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. ஆனால், 30 வயது வரை வாழக்கூடிய பூனையும் இருக்கிறது.இங்கிலாந்தில் உள்ள Rubble என்ற பூனை 30வது பிறந்த நாளைக் கொண்டாடி, உலகிலேயே அதிக வயதுடையது என்ற சாதனை படைத்துள்ளது