வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

சேலம் – சென்னை இடையே 8 வழி பசுமை சாலை ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை க்ாகசேலம் மாவட்டத்தில் 36.3 கிலோ மீட்டரும், தர்மபுரியில் 56 கிலோ மீட்டரும், திருவண்ணாமலையில் 123 கிலோ மீட்டரும், காஞ்சிபுரத்தில் 59 கிலோ மீட்டரும் என பசுமை சாலை அமைக்கப்படுகிறது.

இதற்காக 5 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருவதற்கு  விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் நிலம் அளவீடு செய்யப்பட்ட பகுதிகளான ஆச்சாங்குட்டப்பட்டி, குப்பனூர், கீரிப்பட்டி, குள்ளப்பட்டி, ராமலிங்கபுரம் உள்ளிட்ட கிராமங்களில் கருப்புக்கொடி கட்டப்பட்டது.  வீடுகளிலும், விவசாய நிலங்களிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டு இருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில கிராமங்களில் கருப்பு கொடி ஏற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *