விறு விறு செய்திகள் பகல் 12 மணி வரை இன்று

தெலுங்கு தேசம் எம்.பி-யான சி.எம் ரமேஷ் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை. ரமேஷின் உறவினர்கள் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

 

தமிழ் வழியில் தேர்வு எழுத அனுமதி கோரி, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தியதைக கண்டித்தும், வழக்குகளை புறக்கணித்து, பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி மாணவ மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

சென்னை அடையாறு இல்லத்தில் டிடிவி தினகரனுடன் எம்எல்ஏ கருணாஸ் கந்திப்பு

 

நெல்லை மாவட்டத்தில் உள்ள 8000 நாட்டு படகு மீனவர்கள் 7 நாட்கள் கழித்து இன்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

 

சபரிமலை தேவசம் போர்டை கலைக்க வேண்டும்: சுப்பிரமணியன் சாமியின் மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் சபரிமலை ஐயப்பன் கோவிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டை கலைக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என சமீபத்தில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு ஆதரவும் அதே சமயத்தில் எதிர்ப்பும் ஒருசேர கிளம்பியது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவது இல்லை என கேரள அரசும், கோவிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டும் கூறின.

தீர்ப்புக்கு எதிராக கேரளா மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், ஐயப்பன் கோவிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டை கலைக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமி மற்றும் டிஜி மோகன் தாஸ் ஆகிய இருவரும் உச்ச நீதிமன்றத்தில் இன்று புதிய மனுவை தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனு தொடர்பாக தேவசம் போர்டு மற்றும் கேரள அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 6 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர். சபரிமலை தீர்ப்புக்கு சுப்பிரமணிய சாமி ஆதரவாக கருத்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரயில் பயணிகளுக்கு நவராத்திரி விரத சாப்பாடு – ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்

 

மாதம் ரூ. 15,000 சம்பளம்.. வேலைக்கு ஆள் வைத்து திருடிய கொள்ளைக் கும்பல்.. ராஜஸ்தானில் கைது!

 

மத்திய மேற்கு அரபிக் கடலுக்கு அடுத்த 5நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு 2 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்  லூபன் புயல் வரும் 14ஆம் தேதி ஏமன்-ஓமன் இடையே கரையை கடக்கும்- இந்திய வானிலை ஆய்வு மையம்

 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே பசுமலையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பயின்று வந்த மாணவர்கள் 4 பேர் நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் தற்போது வரை வீடு திரும்பவில்லை என திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்,. அதனடிப்படையில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர், போலீஸார் விசாரணையில் காணாமல் போன 4 மாணவர்களும் சென்னையில் இருப்பதாக போலீசார்க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது

 

அகில உலக ஸ்ரீ இருக்கன்குடி மாரியம்மன் அடியாா் பக்த சேவை அறக்கட்டளை பதிவுஎண் 128/16 சார்பில் 13.10.2018 அன்று மாலை 06:00 மணி முதல் 08:00 மணி வரை
9 ஆம் ஆண்டு
208திருவிளக்கு பூஜை
ஸ்ரீ முப்பிடாதி அம்மன் திருகோவில் நடைபெறு உள்ளது அனைவரும் கலந்து
கொண்டு அம்பாள் திருவருளை பெற்றுய்யுமாறு பக்தர்களை அன்புடன் அழைக்கிறோம்