விடுவிப்பவர்!

அன்றன்றுள்ள அப்பம்

விடுவிப்பவர்!
“நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்; கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்” (சங். 34:19).

நம்முடைய தேவன் விடுவிக்கிற தேவன். இன்றைக்கு உங்களுக்கு இருக்கக்கூடிய எல்லாத் துன்பங்களிலிருந்தும் அவர் உங்களை விடுவிப்பார். “நின்று விடுவிப்பார்” என்று சொல்லுவதைக் கவனியுங்கள். உங்களை விடுவிக்கும்படி, அவர் எழுந்து நின்று கொண்டிருக்கிறார். ஆகவே, துன்பங்களைக் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதேயில்லை.