விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு .

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பு ரகசியங்களை மாலத்தீவு பெண்கள் மூலம் வெளிநாட்டுக்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இஸ்ரோவின் ரகசிய தகவல்களை விற்றதாக 1994ம் ஆண்டு, நவம்பர் 30ம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகள் நாராயணன், சசிக்குமார் என 6 பேரை கேரள காவல்துறை கைது செய்தது.

அனைவரும் 50 நாள் சிறை வாசம் அனுபவித்த நிலையில் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, 1998ல் உச்ச நீதிமன்றம் அத்தனை பேரும் நிரபராதிகள் என தீர்ப்பு அளித்தது.  மேலும் நம்பி நாராயணனுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இழப்பீடு அதிகமாக கேட்டு உச்ச நீதிமன்றத்தில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் மேல்முறையீடு செய்தார்  இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதுடன்
நம்பி நாராயணனை துன்புறுத்திய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.