விஜய் ஆண்டனி நடித்த காளி படத்திற்கு தடை

விஜய் ஆண்டனி நடித்துள்ள காளி திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்ணாதுரை பட நஷ்டத்தை வழங்காமல் காளி படத்தை திரையிட தடை விதிக்கக்கோரி அலெக்சாண்டர் என்பவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 11ம் தேதிக்குள் ரூ4.73 கோடி நீதிமன்றத்தில் செலுத்தினால் தடை நீங்கி விடும், இல்லாவிட்டால் ஏப்ரல் 11 ம் தேதிக்கு பிறகும் தடை தொடரும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.