விஜய்யுடன் சேட்டன் மோதலா…?

அட்லி இயக்கத்தில் விஜய் – நயன்தாரா நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. முதல்கட்டமாக அனல்அரசு இயக்கத்தில் சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. விஜய் அதில் நடித்தார்.
படத்தில் வில்லனாக முன்னணி கதாநாயகர் ஒருவர் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகிய நிலையில், அது வெறும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. மேலும் மலையாள பட உலகில் முன்னணியில் இருக்கும் ஒரு நடிகர், வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.