வாக்கு வங்கி அரசியலுக்கு முற்றுப்புள்ளி… மோடி பேச்சு

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த கூட்டத்தில் பிரதமர் பேசியதாவது:  உற்சாகமான லட்சக் கணக்கான தொண்டர்களை நான் பார்க்கிறேன். தாய் நாட்டிற்கு சேவை செய்ய ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம்.
உலகின் பெரிய ஜனநாயக கட்சி என்பதில், பெருமிதம் கொள்கிறோம்.

மனிதநேயத்திற்கு பெயர் போன பா.ஜ.,க  தீன் தயாளின் கொள்கையை ஒவ்வொரு பா.ஜ., தொண்டரும் பின்பற்றுகிறோம். மகாத்மா காந்தி, தீன் தயாள் உபாத்யாயா, லோகியோ  என 3 வாழ்நாள் சாதனையாளர்களை மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். அவர்களின் கொள்கைகள் நாட்டை வளர்க்க உதவியது

பா.ஜ., ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வளர்சசிக்கான திட்டத்தில் யாரையும் விட மாட்டோம் .ஓட்டு வங்கி அரசியல், இந்தியாவை சீரழித்துள்ளது. இதனால், வாக்கு வங்கி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.