வரலாற்றில் இன்று 15-06-19

வரலாற்றில் இன்று 15-06-19

#உலக காற்று தினம்

உலக காற்று தினம் ஆண்டுதோறும் ஜூன் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும்.

இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும்இ உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது. மேலும் காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது.

மேலும் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

#அன்னா ஹசாரே பெர்த் டே டுடே

சமூக ஆர்வலரான கிசான் பாபுராவ் ஹசாரே எனப்படும் அன்னா ஹசாரே அவர்கள்இ 1937ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள பிங்கார் என்னும் இடத்தில் பிறந்தார்.

சுவாமி விவேகானந்தர் மகாத்மா காந்தி மற்றும் வினோபா பாவேயின் வாழ்க்கை வரலாறுகளையும் அறிவுரைகளையும் படித்த பிறகு ஏழைகள் மேம்பாட்டை தனது வாழ்நாள் நோக்கமாகக் கொண்டார். இவர் பத்ம பூஷன் பத்மஶ்ரீ மஹாவீர் விருது வெளிப்படையான சர்வதேச ஒருமைப்பாட்டு விருது சிட் கில் நினைவு விருது போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.

காந்தியவாதியான அன்னா ஹசாரே இன்று தனது 83 வது வயதில் முனைப்புடன் அடியெடுத்து வைக்கிறார்.

 

முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம்

உலகில் உள்ள அனைத்து முதியவர்களுக்கும் மரியாதை கொடுக்கவும், மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் ஜூன் 15-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

சுமார் 4 முதல் 6 சதவீதம் முதியோர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. இதனால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். முதியவர்களை மரியாதையுடன் நடத்த ஐ.நா.சபை இத்தினத்தை அறிவித்துள்ளது.

 

#இலட்சுமி மித்தல் பெர்த் டே டுடே ,..

இலட்சுமி மித்தல் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள சுரு பகுதியில் சதுல்பூர் என்னும் ஊரில் ஜூன் 15ம் தேதி 1950ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இலண்டனில் வசிக்கும் இந்தியர் ஆவார். இவர் பிரித்தானியாவிலேயே அதிக சொத்துக்களை உடைய அந்நாட்டின் பணக்காரர் பட்டியலில் முதலாவதாக உள்ளார்.

உலகளவில் அதிக இரும்புகளை தயாரிக்கும் நிறுவனமாக உள்ள மித்தல் இரும்பு நிறுவனத்தின் தலைவராக இலட்சுமி மித்தல் திகழ்கிறார். இன்று இவர் தனது 68வது வயதில் அடியெடுத்து வைத்து இரும்பு உலகில் பல சாதனைகளை நிகழ்த்த உள்ளார்.

#முக்கிய நிகழ்வுகள்

1878ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி குதிரை ஒன்று ஓடுகையில் அதன் நான்கு கால்களும் தரையில் படுவதில்லை என்பதை நிறுவும் புகைப்படங்களை எதுவார்து மைபிரிட்ச் என்பவர் எடுத்தார். பின்னர் அசையும் திரைப்படம் உருவாக மூலமாக அமைந்தது.

2013ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குனருமான மணிவண்ணன் மறைந்தார்.

1948ஆம் ஆண்டு ஜூன் 15ம் தேதி அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழிசை இயக்கம் ஆகியவற்றின் அமைப்பாளருமான அண்ணாமலை செட்டியார் மறைந்தார்.

1849ஆம் ஆண்டு ஜூன் 15 தேதி ஜேம்ஸ் போக், ஐக்கிய அமெரிக்காவின் 11-வது குடியரசு தலைவர் மறைந்தார்.