வரலாற்றில் இன்று – (10 – 08 – 2018)

வி.வி.கிரி

🏁 இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி 1894ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி ஒடிசாவில் உள்ள பெர்ஹhம்பு+ரில் பிறந்தார்.1914-ல் காந்தியை சந்தித்த பிறகு, சட்டம் பயில்வதை விட, விடுதலைப் போராட்டம், தொழிலாளர் உரிமைகளுக்கான போராட்டங்களில் பங்கேற்பதுதான் முக்கியம் என்று நினைத்தார்.1936-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்ற இவர், மதராஸ் மாகாணத்தின் தொழிலாளர் மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பதவியேற்றார். பிறகு இலங்கைக்கான இந்தியத் தூதர், மத்தியத் தொழிலாளர் துறை அமைச்சர், பல மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றியிருக்கிறார்.அதன்பின் குடியரசுத் துணைத் தலைவர் (1967), குடியரசுத் தலைவர் (1969 இடைக்காலப் பதவி), அதன்பிறகு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வென்று 1974 வரை அப்பதவியில் இருந்தார்.இந்தியாவில் தொழிலாளர் சங்கங்கள் வளர்ச்சி பெறுவதற்கு அடித்தளமிட்ட இவர் தனது 86-வது வயதில் (1980) மறைந்தார்.

சாவி

தமிழின் மிகச்சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவரான ‘சாவி” (சா.விஸ்வநாதன்) 1916ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி வேலு}ர் மாவட்டம் ஆற்காடு அடுத்த மாம்பாக்கத்தில் பிறந்தார்.எழுத்தாளராக வேண்டும் என்பது இவரது கனவு. எனவே ‘விடாக்கண்டர்” என்ற பெயரில் எழுதி வந்தார். பின்னர் ‘கல்கி” ஆசிரியர் சதாசிவம் இவரை அழைத்து, உதவி ஆசிரியராக நியமித்தார்.பிறகு ‘சாவி” என்று புனைப்பெயர் சூட்டிக்கொண்டார். தொடர்ந்து கல்கியில் இவர் எழுதிய ‘மாறுவேஷத்தில் மந்திரி”, ‘சு+யஸ் கால்வாயின் கதை” உள்ளிட்ட நகைச்சுவைக் கட்டுரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.படைப்புகளில் நகைச்சுவையுடன் கருத்துச் செறிவு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, சாதித்துக்காட்ட வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட சாவி தனது 85-வது வயதில் (2001) மறைந்தார்.