வரலாற்றில் இன்று,.. நவீன கண்டுபிடிப்பும் துணை போகிறது இவர்களை அழிக்க….!

 

✍சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

👧 பெண் சிசுவைப் பிறக்க விடக்கூடாது என்ற பழமையான கண்ணோட்டத்துக்கு, நவீன கண்டுபிடிப்பு கருவியும் துணைபோவது தான் துயரம். தப்பி தவறி பிறக்கும் பெண் குழந்தைகளும் ஒவ்வொரு கட்டத்திலும் தப்பிப் பிழைத்து வளர்ந்து, வாழ்ந்து மறைய வேண்டியிருக்கிறது.

👧 உடை, படிப்பு, விளையாட்டு பொருள் என ஒவ்வொரு விஷயத்திலும் புறக்கணிப்பை சந்திக்கும் பெண் குழந்தை இளமையிலிருந்தே ஒவ்வொரு தடைகளையும் கடந்து தான் வளர்கிறாள்.

👧 பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், 2011ஆம் ஆண்டு ஐ.நா. சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி, அக்டோபர் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. ‘பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்” என்பது இத்தினத்தின் மையக்கருத்து ஆகும்.

✍மாயு ரம் வேதநாயகம் பிள்ளை

✍ புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர், மறுமலர்ச்சி கவிஞருமான மாயு ரம் வேதநாயகம் பிள்ளை 1826ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி திருச்சி மாவட்டம் குளத்தூரில் பிறந்தார்.

✍ மாயு ரம் மாவட்ட முன்சீஃபாக 13 ஆண்டுகள் பணி புரிந்ததால், மாயு ரம் வேதநாயம் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார். வாழ்க்கை நெறிகள், பொது நீதிகள், பெண் கல்வி, ஒற்றுமை உணர்வு, புதிய சிந்தனைகள், முற்போக்கு கருத்துகள் ஆகியவை இவரது கவிதைகளின் கருப்பொருளாக அமைந்தன.

✍ தமிழகத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது, தன் சொத்துகள் அனைத்தையும் தானமாக வழங்கினார். குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறும் வழக்கத்தை கடுமையாக எதிர்த்தார்.

✍ தமிழின் முதல் புதினத்தைப் படைத்தவரும், மறுமலர்ச்சி கவிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான மாயு ரம் வேதநாயகம் பிள்ளை 63வது வயதில் (1889) மறைந்தார்.

✍ஹென்ரிச் வில்லெம் ஒல்பெர்ஸ்

👉 தற்காலப் பேரண்டவியல் கருத்துகளுக்கு முன்னோடியாக அரிய சிந்தனையை எழுப்பிய ஜெர்மானிய மருத்துவர், வானவியலாளர் ஹென்ரிச் வில்லெம் ஒல்பெர்ஸ் 1758ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி பிறந்தார்.

👉 வால் நட்சத்திரம் மற்றும் வால் நட்சத்திரங்கள் செல்லும் பாதைகளை கணிக்கும்முறையை கண்டறிந்தவர். சிறுகோள் பாறைகளான பல்லாஸ், வெஸ்டா ஆகியவற்றை கண்டறிந்தவர்.

👉 வானவியலில் பேரார்வம் கொண்டிருந்த இவர் 1840ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி மறைந்தார்.

✍முக்கிய நிகழ்வுகள்

🚀 1958ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி நாசாவின் முதலாவது விண்கலம் பயனியர் 1 சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இது சந்திரனை அடையாமலே மீண்டும் இரண்டு நாட்களில் பு மியில் வீழ்ந்து எரிந்தது.

🚀 1968ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி நாசா முதல் தடவையாக மூன்று விண்வெளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தில் விண்ணுக்கு ஏவியது.

🚢 1811ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி ஜான் ஸ்டீவன்ஸ் கண்டுபிடித்த முதலாவது நீராவிப் படகு சேவை நியு யார்க்கிற்கும் நியு ஜெர்சிக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்டது.

🚀 1984ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி சலேஞ்சர் விண்ணோடத்தில் சென்ற கத்ரின் சலிவன் விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கப் பெண் என்ற பெருமையை பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *