லாரிகள் நேருக்கு நேர் மோதல் – 3 பேர் பலி

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பிராய்லர் கோழிகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று கடலூர் மாவட்டம்  நோக்கி புறப்பட்டது.  லாரியை குறிஞ்சிப்பாடி பழனிவேல்(வயது 40) ஓட்டி வந்தார் லாரியில் பாபு(22), பிருத்திவிராஜ்(22), சரத்(20) ஆகியோரும் இருந்துள்ளனர்

லாரி இன்று அதிகாலை விருத்தாசலம் அருகே வந்து போது நெய்வேலியில் இருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டு வந்த லாரியை மகாலிங்கம்(49) என்பவர் ஓட்டிவந்தார். இந்த 2 லாரிகளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி சாலையில் கவிழ விபத்தில் லாரி டிரைவர்கள் மகாலிங்கம், பழனிவேல் மற்றும் பாபு ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

பிருத்திவிராஜ், சரத் ஆகிய 2 பேரும் லாரியின் இடிபாட்டிற்குள் சிக்கி பலத்த காயம் அடைந்த நிலையில் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்  மேலும் பிராய்லர் கோழி ஏற்றி வந்த லாரியில் இருந்த 50 கோழிகளும் விபத்தில் நசுங்கி இறந்தன.