ரேசன் கடை பணியாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தம்…?!

நியாய விலைக்கடை பணியாளர்கள் வரும் செப்டம்பர் 7ம் தேதி முதல் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ளனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நியாய விலைக்கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் இதனை கூறியுள்ளார். இந்த போராட்டம் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.