ரூ.50 கோடி மதிப்பிலான கார்த்தி சிதம்பரம் சொத்துக்கள் முடங்கியது

ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு விதிமுறைகளை மீறி, அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்தது தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், முன்ஜாமீன் கோரி, சிதம்பரம் மற்றும் கார்த்தி இருவரும், மனு தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது.இந்த நிலையில் ப. சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் அனைத்து சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

டெல்லியில் உள்ள ப. சிதம்பரத்தின் வீட்டை அமலாக்கத்துறை முடக்கியது. மேலும் உதகமண்டலம், கொடைக்கானல், லண்டன் உள்பட வெளிநாடுகளில் இருந்த வீடுகளும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. முடக்கப்ட்டுள்ள ப.சிதம்பரம், கார்த்தி சொத்து மதிப்பு ரூ.54 கோடி ஆகும். வங்கியில் இருந்த நிரந்தர இருப்பு ரூ .90 லட்சத்தையும் முடக்கியுள்ளது.