ராணி வார இதழின் ஆசிரியர் பொறுப்பில் 44 ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வு பெற்ற அ. மா. சாமி பிறந்த தினம்…

அ. மா. சாமி (மே 7, 1935) என்று அறியப்படும் அருணாசலம் மாரிசாமி என்பவர் தமிழ் எழுத்தாளர், இதழாளர், நூலாசிரியர் எனப் பல தகுதிகள் கொண்டு விளங்கி வருபவர். ராணி வார இதழின் ஆசிரியர் பொறுப்பில் 44 ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.[சான்று தேவை] தினத்தந்தி நிறுவனத்தில் செய்தியாளராகத் தம் பணியைத் தொடங்கினார். சி. பா. ஆதித்தனார் அவர்களின் அறிவும் அனுபவமும் இவரை நெறிப்படுத்தின.

முகவை மாவட்டத்தில் கோப்பை நாயக்கன்பட்டியில் பிறந்தார். உயர்நிலைப் பள்ளி இறுதி வரை கல்வி பயின்றார். சொந்த முயற்சியில் தமிழ் இலக்கியங்களையும் நூல்களையும் கற்றார்.

சிறுகதைகள், நெடுங்கதைகள், சிறுவர் கதைகள், பயண நூல்கள், இதழியல், வாழ்க்கை வரலாறு எனப் பல வகை நூல்களை அ .மா சாமி எழுதியுள்ளார். தமிழ் இதழ்கள் தோற்றம்-வளர்ச்சி என்னும் நூலை எழுதியுள்ளார். திருக்குறளுக்குப் புதிய உரை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குரும்பூர் குப்புசாமி, அமுதா கணேசன் என்னும் புனைபெயர்களில் கதைகள், சிறுகதைகள் எழுதினார்.