ராசி பலன் 12/10/2018

 

🔯மேஷம் ராசி

செய்யும் முயற்சிகளில் கவனத்துடன் செயல்படவும். எதிர்பாராத தனவரவு கிடைக்கும். மனதில் இனம்புரியாத கவலைகள் அவ்வப்போது தோன்றி மறையும். எதிர்பார்த்த காரியங்களில் சில காலதாமதம் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

அசுவினி : நிதானம் வேண்டும்.
பரணி : தனவரவு உண்டாகும்.
கிருத்திகை : விவாதங்களை தவிர்க்கவும்.

🔯ரிஷபம் ராசி

மனதில் எண்ணிய முயற்சிகளுக்கு செயல்வடிவம் கொடுத்து வெற்றி காண்பீர்கள். சக ஊழியர்களால் ஆதாயமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் மூலம் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். உத்தியோகம் சார்ந்த முடிவுகளில் நிதானத்துடன் செயல்படவும். தம்பதிகளுக்கிடையே சிறுசிறு விவாதங்கள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

கிருத்திகை : வெற்றி காண்பீர்கள்.
ரோகிணி : ஆதாயமான நாள்.
மிருகசீரிடம் : அபிவிருத்தி உண்டாகும்.

🔯மிதுனம்

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நெருக்கமானவர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிடம் : சுபிட்சமான நாள்.
திருவாதிரை : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.

🔯கடகம் ராசி

கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் கூட்டாளிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். தொழில் சார்ந்த அலைச்சலும், பதற்றமும் தோன்றி மறையும். பணியில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகும் . பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
பூசம் : முடிவுகள் சாதகமாகும்.
ஆயில்யம் : பொறுப்புகள் உண்டாகும்.

🔯சிம்மம் ராசி

மனதிற்கு விருப்பமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். குலதெய்வத்தை வழிபடுவதால் மனதிலுள்ள குழப்பங்கள் நீங்கி தெளிவு பெறுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : அமைதி காக்கவும்.
பூரம் : விருப்பம் நிறைவேறும்.
உத்திரம் : தெளிவு பிறகும்.

🔯கன்னி ராசி

உயர் கல்வி சார்ந்த முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். மகான்களின் தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். முக்கியமான கோப்புகளை கையாளும் போது கவனத்துடன் இருக்கவும். தொழில் சார்ந்த புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : முன்னேற்றமான நாள்.
அஸ்தம் : பாராட்டப்படுவீர்கள்.
சித்திரை : நிம்மதியான நாள்.

🔯துலாம் ராசி

பிள்ளைகளின் மூலம் பெருமைகள் உண்டாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். விவாதங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தந்தை பற்றிய எண்ணங்கள் அவ்வப்போது தோன்றி மறையும். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் அமையும். குறுகிய தூர பயணங்கள் மனதில் ஒருவிதமான மாற்றத்தை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : பெருமை உண்டாகும்.
சுவாதி : மகிழ்ச்சியான நாள்.
விசாகம் : மாற்றமான நாள்.

🔯விருச்சகம் ராசி

விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பீர்கள். நண்பர்களின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பூமி விருத்திக்கான பணிகளை மேற்கொள்வீர்கள். மன தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : ஜெயம் உண்டாகும்.
அனுஷம் : இன்னல்கள் குறையும்.
கேட்டை : தன்னம்பிக்கை மேம்படும்.

🔯தனுசு ராசி

வாக்குறுதிகளை கொடுக்கும்போது சிந்தித்து செயல்படவும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் சாதகமான பலன்கள் கிடைக்கும். வாதத்திறமையால் இலாபமடைவீர்கள். மனதில் புதுவிதமான இலட்சியங்கள் பிறக்கும். நினைவாற்றல் மேம்படும். பணிபுரியும் இடங்களில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : சிந்தித்து செயல்படவும்.
பூராடம் : இலாபகரமான நாள்.
உத்திராடம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

🔯மகரம் ராசி

சிந்தனையின் போக்கில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். பழைய நினைவுகளால் மனதில் இருந்த கவலைகள் மறையும். தொழில் நிமிர்த்தமான அலைச்சல்கள் உண்டாகும். புதிய நண்பர்களிடம் பேசும்போது நிதானத்துடன் இருக்கவும். தொழில் தொடர்பான பணி வாய்ப்புகளில் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : மாற்றமான நாள்.
திருவோணம் : கவலைகள் மறையும்.
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

🔯கும்பம் ராசி

விவாதங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். ஆராய்ச்சி தொடர்பான புதுவித எண்ணங்கள் தோன்றும். மூத்த சகோதரர்களின் மூலம் ஆதரவான சூழல் அமையும். நீங்கள் எதிர்பார்த்த பணி உயர்வு சாதகமாக அமையும். சபைகளில் ஆதரவுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.
சதயம் : எண்ணங்கள் மேலோங்கும்.
பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.

🔯மீனம் ராசி

தொழில் சம்பந்தமான புதிய எண்ணங்கள் தோன்றும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கௌரவ பதவிகளால் செல்வாக்கு அதிகரிக்கும். கடல் மார்க்க பயணங்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பணியில் எதிர்பார்த்த சாதகமான மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
ரேவதி : மகிழ்ச்சியான நாள்