*ராசி பலன்கள் * 9/10/2018

🔯மேஷம் ராசி

புதிய முயற்சிகளை சிந்தித்து செயல்படுத்துங்கள். பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மனச்சோர்வு நீங்கி எதையும் சாதிக்கும் அளவிற்கு தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அசுவினி : சிந்தித்து செயல்படவும்.
பரணி : உதவிகள் கிடைக்கும்.
கிருத்திகை : நன்மைகள் உண்டாகும்.

🔯ரிஷபம் ராசி

கூட்டாளிகளும், நண்பர்களும் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள். பிறருக்கு கடன் கொடுப்பதை தவிர்க்கவும். உயர் அதிகாரிகளின் ஆதரவும், வழிகாட்டுதலும் சாதகமான பலனை அளிக்கும். சில நேரங்களில் மன வருத்தத்திற்கு ஆளாவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். பொறுப்புடனும், கவனத்துடனும் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கிருத்திகை : ஆதரவான நாள்.
ரோகிணி : சாதகமான நாள்.
மிருகசீரிடம் : பயணங்களால் நன்மை உண்டாகும்.

🔯மிதுனம் ராசி

வருமானம் அதிகரிக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய எண்ணங்கள் தோன்றும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனைகளும் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த இழுபறி நிலை நீங்கி சுபிட்சம் உண்டாகும். ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிடம் : தனலாபம் உண்டாகும்.
திருவாதிரை : புதிய எண்ணங்கள் தோன்றும்.
புனர்பூசம் : சுபிட்சம் உண்டாகும்.

🔯கடகம் ராசி

பெரியோர்களிடம் உங்களின் மதிப்பு உயரும். மனதில் உற்சாகம் பிறக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். விளையாட்டில் சாதகமான சூழல் உண்டாகும். மன தைரியம் அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள். தாய் பற்றிய வீண் கவலைகள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : மதிப்பு உயரும்.
பூசம் : வெற்றி கிடைக்கும்.
ஆயில்யம் : தைரியம் உண்டாகும்.

🔯சிம்மம் ராசி

வியாபாரம் தொடர்பான காரியங்களை யோசித்து செயல்படுத்துவது நல்ல பலனைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரவு திருப்தியை அளிக்கும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மனதில் புதிய உற்சாகமும், தைரியமும் பிறக்கும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : சிந்தித்து செயல்படவும்
பூரம் : திருப்தியான நாள்.
உத்திரம் : உற்சாகமான நாள்.

🔯கன்னி ராசி

சாதுர்யமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகஸ்தரர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : வெற்றி கிடைக்கும்.
அஸ்தம் : பேச்சில் நிதானம் தேவை.
சித்திரை : பிரச்சனைகள் குறையும்.

🔯துலாம் ராசி

தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். பணவரவு மேம்படும். மனதில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும். சுயதொழில் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : போட்டிகள் குறையும்.
சுவாதி : மன அமைதி கிடைக்கும்.
விசாகம் : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

🔯விருச்சகம் ராசி

தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த ஆதரவான சூழலும், வாய்ப்புகளும் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். தொழில் நிமிர்த்தமான முடிவுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : இழுபறி நிலை அகலும்.
அனுஷம் : ஆதரவு அதிகரிக்கும்.
கேட்டை : கவனம் வேண்டும்.

🔯தனுசு ராசி

திட்டமிட்ட பணிகளை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது வெற்றி தரும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சிக்கலான சில விஷயங்களை சாதுர்யமாக பேசி முடிவு காண்பீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : நிதானம் வேண்டும்.
பூராடம் : ஒற்றுமை மேம்படும்.
உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.

🔯மகரம் ராசி

நினைத்த செயலில் எண்ணிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதன் மூலம் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்பு இருந்ததை விட முன்னேற்றமான சூழல் உண்டாகும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : ஜெயம் உண்டாகும்.
திருவோணம் : மதிப்பு கூடும்
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.

🔯கும்பம் ராசி

வீண் பேச்சுக்களை குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். கோபத்தை தவிர்த்து அமைதியாக செயல்படவும். உத்தியோகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடலாம். மற்றவர்களின் பிரச்சனைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : பேச்சில் நிதானம் தேவை.
சதயம் : விருப்பங்கள் நிறைவேறும்.
பூரட்டாதி : பயணங்களில் கவனம் தேவை.

🔯மீனம் ராசி

புத்திரர்கள் தொடர்பான மனக்கவலைகள் தோன்றி மறையும். புதிய ஆர்டர்கள் வாங்குவது தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிலும் நிதானமாக செயல்படுவதும், மற்றவர்களை அனுசரித்துப் போவதும் நல்லது. எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : கவலைகள் நீங்கும்.
உத்திரட்டாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
ரேவதி : அனுசரித்துச் செல்லவும்.