ராசி பலன்கள்

🔯மேஷம் ராசி

கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். பொதுக்கூட்டப் பேச்சில் ஈடுபடுபவர்கள் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அசுவினி : உறவு மேம்படும்.
பரணி : பேச்சில் கவனம் வேண்டும்.
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

🔯ரிஷபம் ராசி

உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புத்திரர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அமைதியாக நடந்து கொள்ளவும். பூர்வீக சொத்துகளால் தனவிரயம் உண்டாகும். இளைய சகோதரர்களால் சாதகமான சூழல் நிலவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரோகிணி : நிதானம் வேண்டும்.
மிருகசீரிடம் : தனவிரயம் உண்டாகும்.

🔯மிதுனம் ராசி

புதிய மனை வாங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். பொருட்சேர்க்கையால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு சாதகமான சூழல் அமையும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : எண்ணங்கள் மேலோங்கும்.
திருவாதிரை : பொருட்சேர்க்கை உண்டாகும்.
புனர்பூசம் : பாராட்டு,

🔯கடகம் ராசி

குறுகிய தூர பயணங்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். புதிய முயற்சிகளில் சாதகமான சூழல் அமையும். மாணவா்களின் அறிவுக்கூா்மை வெளிப்படும். வாக்குவன்மையால் அனைவரையும் கவர்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களுடன் விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். புதுவிதமான சிந்தனைகள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : அறிவுக்கூா்மை வெளிப்படும்.
ஆயில்யம் : தனவரவு உண்டாகும்.

🔯சிம்மம் ராசி

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். பயணங்களின்போது எச்சரிக்கை வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். நெருக்கமானவர்களுக்கிடையே கலந்துரையாடல் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
பூரம் : அனுசரித்துச் செல்லவும்.
உத்திரம் : பயணங்களில் கவனம் தேவை.

🔯கன்னி ராசி

உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். திடீர் யோகத்தால் தனவரவு உண்டாகும். சுயதொழிலில் மேன்மையான சூழல் அமையும். புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய வாகனங்களை வாங்குவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

உத்திரம் : அதிர்ஷ்டகரமான நாள்.
அஸ்தம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
சித்திரை : தனவரவு உண்டாகும்.

🔯துலாம் ராசி

குடும்ப உறுப்பினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். பொருட்களை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். கடல் மார்க்க செய்திகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் சார்ந்த புதிய எண்ணங்கள் மேலோங்கும். நண்பர்களின் உதவியால் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : விவாதங்களை தவிர்க்கவும்.
சுவாதி : அனுகூலமான நாள்.
விசாகம் : மேன்மையான நாள்.

🔯விருச்சகம்

செய்யும் தொழிலால் கீர்த்தி உண்டாகும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். தந்தை, மகனுக்குமான உறவு மேம்படும். தலைமை பதவி கிடைப்பதற்கு சாதகமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : பாராட்டப்படுவீர்கள்.
அனுஷம் : உறவு மேம்படும்.
கேட்டை : சாதகமான நாள்.

🔯தனுசு ராசி

மூத்த சகோதரர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரியும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வேலைகளை பிறரிடம் கொடுக்காமல் நீங்களே செய்து முடிப்பது சிறப்பு. வீண் அலைச்சல்களால் உடல்சோர்வு உண்டாகும். பதவி உயர்விற்கான முயற்சியில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : அனுகூலமான நாள்.
பூராடம் : பணிகளில் கவனம் வேண்டும்.
உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.

🔯மகரம் ராசி

நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் இலாபம் உண்டாகும். மனைவி வழி உறவுகளிடம் நிதானத்துடன் செயல்படவும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கெளரவ பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். நிர்வாகம் சம்பந்தமான முடிவுகளில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : இன்பமான நாள்.
திருவோணம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
அவிட்டம் : வாய்ப்புகள் அதிகரிக்கும்.

🔯கும்பம் ராசி

சந்திராஷ்டம தினம் என்பதால் நெருக்கமானவர்களுக்கிடையே தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். மனதில் பலவிதமான குழப்பங்கள் உண்டாகும். எதிலும் நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
சதயம் : விவேகத்துடன் செயல்படவும்.
பூரட்டாதி : உதவுவதில் கவனம் வேண்டும்.

🔯மீனம் ராசி

புத்திரர்களின் ஆதரவால் சேமிப்பு உயரும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். வழக்குகளில் எண்ணிய முடிவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திரட்டாதி : சேமிப்பு உயரும்.
ரேவதி : இன்னல்கள் குறையும்.