ராசி பலன்கள் 13/ 3 /2019

 

🔯மேஷம் ராசி

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணர்வீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் அமையும். செய்தொழிலில் நீங்கள் செய்யும் புதுவகை மாற்றங்களினால் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : தேவைகள் பூர்த்தியாகும்.

பரணி : பலவீனத்தை உணர்வீர்கள்.

கிருத்திகை : இலாபம் அதிகரிக்கும்.

🔯ரிஷபம் ராசி

கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எண்ணிய செயலை பல தடைகளை கடந்து முடிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஒரு புதிய அனுபவம் கிடைக்கும். உடைமைகளில் கவனம் வேண்டும். முடிவுகளை எடுக்கும் முன் பெரியவர்களிடம் தகுந்த ஆலோசனை கேட்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : தடைகளை களைவீர்கள்.

ரோகிணி : புதிய அனுபவம் கிடைக்கும்.

மிருகசீரிடம் : பொறுப்புகள் உயரும்.

🔯மிதுனம் ராசி

பணி நிமிர்த்தமான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். தொழில் முனைவோர்க்கு சாதகமான நாள். பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகளால் ஆதாயம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிடம் : பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

திருவாதிரை : ஆதரவு பெருகும்.

புனர்பூசம் : சாதகமான நாள்.

🔯கடகம் ராசி

கல்வி கற்கும் மாணவர்களுக்கு மேன்மை உண்டாகும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை கற்பீர்கள். பிள்ளைகளின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.

பூசம் : புதிய நுணுக்கங்களை கற்பீர்கள்.

ஆயில்யம் : அனுகூலமான நாள்.

🔯சிம்மம் ராசி

வியாபாரத்தில் விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். வாகன வசதிகள் பெருகும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : எண்ணங்கள் ஈடேறும்.

பூரம் : வசதிகள் பெருகும்.

உத்திரம் : இன்பமான நாள்.

🔯கன்னி ராசி

சுப முயற்சிகள் கைக்கூடும். நண்பர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிணக்குகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் எதிர்பாராத வருகையால் கலகலப்பான சூழல் அமையும். தன வரவுகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

உத்திரம் : முயற்சிகள் கைக்கூடும்.

அஸ்தம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

சித்திரை : உதவிகள் கிடைக்கும்.

🔯துலாம் ராசி

மேலதிகாரிகளிடம் நிதானப்போக்கை கையாளவும். முக்கிய முடிவுகளை பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து எடுக்கவும். சக பணியாளர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். உடல்நலத்தில் கவனம் வேண்டும். பயணங்களில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

சித்திரை : நிதானம் வேண்டும்.

சுவாதி : விவாதங்களை தவிர்க்கவும்.

விசாகம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

🔯விருச்சகம் ராசி

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவுகள் பெருகும். சகோதரர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். புதிய முயற்சிகளில் எண்ணிய இலாபம் உண்டாகும். மற்றவர்களின் பணிகளை கூடுதலாக பார்க்க வேண்டிய சூழல் அமையும். திருமண முயற்சிகளில் சுப முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : ஆதரவுகள் பெருகும்.

அனுஷம் : விவாதங்களை தவிர்க்கவும்.

கேட்டை : இலாபம் உண்டாகும்.

🔯தனுசு ராசி

பணியில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பணியில் திருப்தியான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : ஆதாயம் கிடைக்கும்.

பூராடம் : அறிமுகம் உண்டாகும்.

உத்திராடம் : வெற்றி கிடைக்கும்.

🔯மகரம் ராசி

வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். செய்தொழிலில் செல்வாக்கு உயரும். அரசு வேலைகளில் இருந்து வந்த தடை, தாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும். சாதுர்யமாக பேசி எண்ணிய காரியத்தை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

உத்திராடம் : இலாபம் உண்டாகும்.

திருவோணம் : செல்வாக்கு உயரும்.

அவிட்டம் : மதிப்பு கிடைக்கும்.

🔯கும்பம் ராசி

சொந்த பந்தங்களிடம் கோபமான பேச்சுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த வேலைகளை முடிப்பதில் தாமதம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மற்றவர்களின் செயல்களில் தலையிட வேண்டாம்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : வீண் பேச்சுகளை தவிர்க்கவும்.

சதயம் : தாமதம் உண்டாகும்.

பூரட்டாதி : சாதகமான நாள்.

🔯மீனம் ராசி

எதிர்பார்த்த கடன் வாய்ப்புகள் சாதகமாக அமையும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகளும், பணியில் மாற்றமும் உண்டாகும். சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளால் சாதகமான சூழல் ஏற்படும். திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.

உத்திரட்டாதி : மாற்றம் உண்டாகும்.

ரேவதி : அங்கீகாரம் கிடைக்கும்.