ராசிபலன்கள் 🔔 3/8/2018 🔔

மேஷம் ராசி

தொழிலில் நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சியால் இலாபம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மனதில் இனம் புரியாத கவலைகள் தோன்றி மறையும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லவும். உத்தியோகத்தில் உங்கள் மீதான விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
பரணி : மனக்கவலைகள் நீங்கும்.
கிருத்திகை : அனுசரித்துச் செல்வது நல்லது.

🔯ரிஷபம் ராசி

விலையுயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்பு குறையும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவதால் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : கவனம் தேவை.
ரோகிணி : சேமிப்பு குறையும்.
மிருகசீரிடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

🔯மிதுனம் ராசி

நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களால் இலாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பாராட்டு பெறுவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி உண்டாகும். வாகனப் பழுதுகளை சரிசெய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிடம் : ஆசைகள் நிறைவேறும்.
திருவாதிரை : கீர்த்தி உண்டாகும்.
புனர்பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.

🔯கடகம் ராசி

எடுத்த வேலையை முழுமையாக முடிக்க காலதாமதம் ஏற்படும். தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்க காலதாமதமாகும். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தை விரிவுப்படுத்த முயல்வீர்கள். அரசால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்க காலதாமதமாகும்.
பூசம் : வாதங்களை தவிர்ப்பது நல்லது.
ஆயில்யம் : தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

🔯சிம்மம் ராசி

உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல்கள் உண்டாகும். தொழிலில் இலாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வீர்கள். மற்றவர்களுக்கு உதவுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்

மகம் : மற்றவர்களுக்கு உதவுவீர்கள்.
பூரம் : திறமைகள் வெளிப்படும்.
உத்திரம் : அலைச்சல் உண்டாகும்.

🔯கன்னி ராசி

புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். அழகு மற்றும் உடல் தோற்றப் பொழிவிற்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் அமையும். சிலர் உங்களைப் பற்றி குறை கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் :6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
அஸ்தம் : புதிய அனுபவம் கிடைக்கும்.
சித்திரை : வேலைப்பளு அதிகரிக்கும்.

🔯துலாம் ராசி

விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்த பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். பழைய பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு காண முயல்வீர்கள். தொழிலில் பணியாட்களை அனுசரித்துச் செல்லவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

சித்திரை : எண்ணங்கள் ஈடேறும்.
சுவாதி : கருத்து வேறுபாடுகள் வந்து போகும்.
விசாகம் : அன்பு அதிகரிக்கும்.

🔯விருச்சகம் ராசி

இழுபறியாக இருந்த வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கிடைக்கும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சுயதொழில் செய்பவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது கவனத்துடன் செயல்படவும். உத்தியோகஸ்தரர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : இழுபறி வேலைகள் முடியும்.
அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.
கேட்டை : சாதகமான நாள்.

🔯தனுசு ராசி

வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளுக்கு பாராட்டு கிடைக்கும். பிள்ளைகளின் தனித்திறமைகள் புலப்படும். தேவையில்லாத சிந்தனைகளால் மனதில் குழப்பங்கள் உண்டாகும். தேவையற்ற வாதங்களால் நெருங்கியவர்களிடம் மனக்கசப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : மாற்றங்கள் உண்டாகும்.
பூராடம் : பாராட்டு கிடைக்கும்.
உத்திராடம் : அமைதியாக இருப்பது நல்லது.

🔯மகரம் ராசி

செய்யும் காரியத்தில் எதிர்பார்த்த சுபச் செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய வாகனங்களை வாங்க முயற்சிப்போர்க்கு சாதகமான செய்திகள் கிடைக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழல் அமையும். மனைவியின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : வெற்றி கிடைக்கும்.
திருவோணம் : மகிழ்ச்சி உண்டாகும்.
அவிட்டம் : அங்கீகாரம் கிடைக்கும்.

🔯கும்பம் ராசி

செய்தொழிலில் மேன்மை உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. தனிமையாக இருப்பதை தவிர்ப்பது நன்மையை தரும். பொருளாதார நிலை சீராக இருக்கும். மனதில் சிறு சிறு சஞ்சலங்கள் தோன்றினாலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : மேன்மை உண்டாகும்.
சதயம் : பொருளாதாரம் சீராகும்.
பூரட்டாதி : தைரியத்துடன் செயல்படுவீர்கள்.

🔯மீனம் ராசி

பிள்ளைகளின் செயல்களால் பெருமிதம் கொள்வீர்கள். மாணவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். நினைத்த காரியங்களை நினைத்தப்படியே செய்து முடிப்பீர்கள். திறமையான பேச்சினால் உங்களின் மதிப்பு உயரும். புதிய சொத்துக்களை வாங்குவதில் விருப்பம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

பூரட்டாதி : பிள்ளைகளால் பெருமிதம் உண்டாகும்.
உத்திரட்டாதி : நற்பெயர் உண்டாகும்.
ரேவதி : மதிப்பு கூடும்.