ரம்ஜானை இன்புறக் கொண்டாடி மகிழ முதலமைச்சர் வாழ்த்து

இஸ்லாமியப் பெருமக்கள் புனித ரமலான் மாதத்தில் முப்பது நாட்களும் நோன்பிருந்து, எல்லோரிடமும் அன்பு பாராட்டி, ஏழை எளியவர்களுக்கு உணவு அளித்து, இறை சிந்தனையை மனதில் நிறுத்தி, அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன், இறைவனை தொழுது, ரம்ஜான் திருநாளை உற்சாகமாக கொண்டாடுவதாகக் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு நலத்திட்டங்களை இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வு மேன்மையுற தமிழக அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருவதாக தமது வாழ்த்தில் குறிப்பிட்ட முதலமைச்சர், ரம்ஜான் பெருநாளில், உலகில் அமைதி நிலவி, இன்பம் பெருகி, அன்பு தழைக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மெய்வருத்தி நோன்பிருந்து, அன்பு, இரக்கம், கருணை, ஈகை எனும் மானுடத்தின் மிக உயர்ந்த பண்புகளை தமதுசெயல்பாடுகளின் மூலம் வெளிப்படுத்தும் இஸ்லாமிய மக்கள்அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரமலான்திருநாள் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்