ரஜினி கட்சி தொடங்கினால் … – நடிகை நளினி

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள நாவலூர் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகை நளினி கலந்து கொண்டார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ் சினிமா அதிக கதை களத்துடன் வளர்ச்சி பெற்று திகழ்கிறது. ஆனால் வன்முறை காட்சிகளை தவிர்த்து சமுதாய சீர்திருத்தம், விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும். திரைப்படங்களை போல டி.வி. தொடர்களுக்கும் தணிக்கை சான்று வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை. நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கினாலும் சரி, பா.ஜனதாவின் மாநில தலைவராக வந்தாலும் சரி அதை வரவேற்பேன் இவ்வாறு அவர் கூறினார்.