ரஜினி அறிவுரையே மந்திரம்

‘பேட்ட’ படப்பிடிப்புக்கு இடையே விஜய் சேதுபதி ரஜினி அறிவுரை வழங்கியுள்ளார்.

”படங்கள் எல்லாம் இப்போதே ரொம்ப தயாரிக்காதீங்க. நல்ல மார்க்கெட் இருக்கும் போது நிறைய படங்கள் நடிங்க. இப்போது தான் நடிக்க முடியும். படங்கள் எல்லாம் அப்புறமா தயாரிக்கலாம்” என்று விஜய் சேதுபதியிடம் தெரிவித்துள்ளார் ரஜினி. ‘

ஆரஞ்சு மிட்டாய்’, ‘மேற்கு தொடர்ச்சி மலை’, ‘ஜூங்கா’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார் விஜய் சேதுபதி. மேலும், எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள படத்தை அவரே தயாரிப்பதாக இருந்தது. தற்போது, அப்படத்தை விஜய் சேதுபதி தயாரிக்கவில்லை. வேறு தயாரிப்பாளர்களிடம் பேசி வருகிறார்கள்.