ரசிகர்கள் வருத்தத்துடன் திரும்பி அனுப்பிய ‘சீமராஜா’

பொன்ராம் – சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘சீமராஜா’.  திரைப்படம் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில்,  சீமராஜா திரைப்படத்தின் காலை 5 மணி சிறப்பு காட்சி இன்று ரத்து செய்யப்பட்டது.  இதனால் தியேட்டர்களில் படத்தை காண வந்த ரசிகர்கள் வருத்தத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதுகுறித்து தியேட்டர்களின் உரிமையாளரிடம் கேட்ட போது, எங்களுக்கு படத்துக்கான லைசென்ஸ் வரவில்லை. எனவே படத்தை திரையிட முடியவில்லை  ஆன்-லைனில் முன்பதிவு செய்திருப்பவர்களுக்கு அவர்களது கணக்கில் பணம் திரும்ப செலுத்தப்பட்டு விடும். கவுன்டரில் முன் பதிவு செய்திருந்தவர்களுக்கு கட்டணம் திரும்ப செலுத்தப்படும் என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *