ரசிகர்களுடன் சீமராஜா படத்தை பார்த்தார்.

நடிகர் சிவகார்த்திகேயன் குரோம்பேட்டையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் ரசிகர்களுடன் சீமராஜா படத்தை பார்த்து ரசித்தார்.

படம் பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன் பேசியதாவது, படம் முழுவதையும் ரசிகர்களுடம் இணைந்து பார்த்தேன். நல்ல வரவேற்பு இருக்கிறது.

இதில் வரலாறு அதாவது 14-ஆம் நூற்றாண்டு சம்பந்தப்பட்ட கதை ஒன்று உள்ளது. அந்த காட்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அனைவருக்கும் நன்றி. குடும்பத்துடன் பார்க்கும் படமாக சீமராஜா இருக்கும் என்றார்