ரசாயன ஆலையில் தீ -கடலில் மூழ்கி 2 பேர் பலி-விவசாயிகள் பேரணி

தாராபுரில் ரசாயன ஆலையில் தீ விபத்து : 3 பேர் உயிரிழப்பு

மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் தாராப்பூர் நகரில் உள்ள பால்கர் பகுதியில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர்ட் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . மேலும் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து இன்னும் தெரியவில்லை.

          புதுச்சேரி அருகே கடலில் மூழ்கி 2 இளைஞர்கள் பலி

புதுச்சேரி : புதுச்சேரி அருகே கடலில் குளிக்கும்போது நீரில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்கள் உடல் சின்னவீராம்பட்டினத்தில் கரை ஒதுங்கியது. பெங்களூரூவைச் சேர்ந்த ஆனந்த், குமார் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

       மராட்டியத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய விவசாயிகள் பேரணி

மும்பை : மராட்டிய மாநிலம் நாசிக்கில் இருந்து மும்பை நோக்கி 30,000 விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர்.விவசாயக் கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் பேரணி செல்கின்றனர். நாசிக்கில் இருந்து பேரணியாக புறப்பட்ட விவசாயிகள் மார்ச் 12 மும்பை சென்று சேருவார்கள்.