யானை நாட்டில் வாழும் மிருகம் அல்ல ,,, மசினி வழக்கில் நீதிபதிகள் கருத்து

திருச்சியை அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மசினி எனும் யானை பராமரிக்கப்பட்டு வந்தது. சம்பவத்தன்று 9 வயதான இந்த பெண் யானையின் நடவடிக்கைகளில் மாற்றத்தை உணர்ந்த பாகன் கஜேந்திரன் அருகில் சென்று பார்த்த போது யானை ஆவேசமாக மதம் பிடித்து அங்குமிங்கும் ஓடியது. மேலும் பாகன் கஜேந்திரனை தூக்கி வீசியதுடன் மிதித்துக் கொன்றது.

சமயபுரம் கோவில் யானை மசினி பாகனை மிதித்துக் கொன்றதால் அதனை மீண்டும் காட்டில் விடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது வழுக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு யானை காட்டில் வாழும் மிருகம், நாட்டில் வாழும் மிருகம் அல்ல. ஆகவே மக்கள் உபயோகத்திற்கு யானைகளை பயன்படுத்தக் கூடாது என கருத்து தெரிவித்தனர்.

யானைகளை கோயிலில் வளர்ப்பது பாரம்பரியமான பழக்க,வழக்கம், அதை முற்றிலும் தடுக்க முடியாது என இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் வாதம் செய்யப்பட்டது தொடர்ந்து மசினி யானைக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து வரும் 29ல் அறிக்கை தர ஒரத்தநாடு கால்நடை மருத்துவமனை முதல்வருக்கு உத்தரவு பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்